‘சிறந்த இந்தியர்’ விருதை வென்ற பேருந்து நடத்துநர் மாரிமுத்து

புதுடெல்லி: 'தமிழ்­நாட்­டின் மரங்­களுக்­கான மனி­தர்' என்று அழைக்­கப்­படும் பேருந்து நடத்­து­நர் மாரி­முத்து யோக­நா­தன், கடந்த 36 ஆண்டுகளில் மூன்­றரை லட்­சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

இவ­ருக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், நேற்று முன்தினம் புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் 'சிறந்த இந்­தி­யர்' விருதை வழங்கினார்.

"தமிழ்­நாட்­டில் பேருந்து நடத்து நராக பய­ணத்தைத் தொடங்கும் பல­ரும் ஒருசம­யத்­தில் புகழ்­பெற்ற மனிதர்களாக மாறி­விடுகின்றனர். பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் நம் மாரிமுத்துவும் ஒரு 'சூப்பர்ஸ்டார்'தான்," என்று அமைச்சர் பாராட்­டினார்.

சிஎன்­என்-நியூஸ் 18 தொலைக் காட்சி சார்­பில், ஆண்­டு­தோ­றும் நாட்­டின் பல துறைகளையும் சார்ந்த சாதனையாளர்கள் அடை­யா­ளம் காணப்பட்டு அவர்களுக்கு சிறந்த இந்­தி­யர்­ விருது வழங்கி கௌர­விக்­கப்­பட்டு வருகிறது.

இந்நிலையில், இவ்வாண்­டுக்­கான விருது வழங்­கும் நிகழ்வில், 'பருவநிலை மாற்றப் பிரச்சி­னை களுக்கான சிறந்த போராளி' என்ற பிரி­வில் கோவை மாவட்­டத்­தைச் சேர்ந்த மாரி­முத்­து சிறந்த இந்­தி­யர் விருதை வென்­றுள்­ளார்.

தன் பேருந்­தில் பயணம் செய் பவர்களுக்கு மரக்­கன்­று­களை இலவசமாக வழங்­கி வருகிறார் இவர். 8,500க்கும் மேற்­பட்ட பள்­ளி, கல்­லூரி, தொழிற்­சா­லை­க­ளுக்குச் சென்றுள்ள இவர், சுற்­றுச்­சூ­ழல் குறித்து விழிப்­பு­ணர்­வு­களை ஏற்­படுத்தி மரக்­கன்­று­களை விநி­யோ­கம் செய்து வரு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!