கோவை: இளம் குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்கும் வகையில் கோவையில் 'வீதிதோறும் நூலகம்' என்ற புதிய திட்டம் அறிமுகம் கண்டுள்ளதாக இம்மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
'ஆட்டோ தம்பி' என்ற பெயரில் ஆட்டோக்களிலும் நடமாடும் நூலகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதேபோல் டாக்சிகளிலும் இத்திட்டம் விரைவில் நடப்புக்கு கொண்டுவரப்பட உள்ளதாக பாலகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் பேசியபோது, "குழந் தைகள் மாலை நேரத்தில் ஆக்க பூா்வமான செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் போதைப்பொருள், குற்றச்செயல்கள் பக்கம் சிறார்கள், இளையர்களைத் தலைகாட்ட விடாமல் தடுக்கவும் கோவை மாநகரில் வீதிகள்தோறும் நூலகத் திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
"முக்கியமாக குடிசைப் பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள தெருவிலும் ஒரு நூலகம் என்ற அடிப்படையில் முதல்கட்டமாக 30 நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருக்கும்.
"இது மட்டுமன்றி தனியாா் கல்லூரிகள் சாா்பிலும் 50 இடங்களில் வீதி நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன," என்று கூறிய காவல் ஆணையா் பாலகிருஷ்ணன், "கைப்பேசியில் மூழ்கியிருக்கும் குழந்தைகளை மீட்டெடுக்க இந்த நூலகங்கள் உதவும். மாணவர்களின் அறிவாற்றல், கற்பனைத்திறன் மேம் படுவதுடன், அவர்கள் தவறான பழக்கங்களை நாடாமல் இருப்ப தற்காகவும் இந்நூலகம் அமைக் கப்பட்டுள்ளது," என்று கூறியுள்ளார்.

