விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய மூவர் விபத்தில் பலி

திருப்­பதி: தீபா­வளி பண்­டி­கையை கொண்­டா­டு­வ­தற்­காக தாய்லாந்தில் இருந்து சொந்த ஊர் திரும்பிய மூன்று பேர் விபத்­தில் சிக்கி மாண்டனர்.

ஆந்­திர மாநி­லம், ஓங்­கோல், தேவுடு சேருவு பகு­தியை சேர்ந்த பவன் குமார், வயது 40, அதே பகு­தியை சேர்ந்த பர­மேஷ், வயது 44, சீனி­வாஸ் ராவ், வயது 44, ஆகிய மூவ­ரும் தாய்­லாந்­தில் ஹோட்­டல் ஒன்றை நடத்தி வரு­கின்­ற­னர்.

சொந்த ஊரில் தீபா­வளி பண்­டிகையை கொண்­டா­டு­வ­தற்­காக தாய்­லாந்­தில் இருந்து அவர்­கள் விமா­னம் மூலம் சென்னை விமான நிலை­யத்­திற்கு வந்­த­னர்.

பின்­னர் அவர்­கள் காரில் புறப்­பட்டு சென்­ற­னர். பவன் குமார் காரை ஓட்­டிச் சென்­றார். ஆந்­திர மாநி­லம் ஓங்­கோல் தேசிய நெடுஞ்­சா­லை­யில் ஒகு­ல­பு­ரம் என்ற இடத்­தில் கார் வந்­த­போது ஓட்­டு­ந­ரின் கட்­டுப்­பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது கார் மோதி­யது.

இதில் கார் முழு­மை­யாக நொறுங்­கி­யது.

காரில் இருந்த மூவ­ரும் உடல் நசுங்கி சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­னர்.

இது குறித்து தக­வல் அறிந்த ஓங்­கோல் காவல் நிலைய ஆய்­வா­ளரான சீனி­வாஸ் மற்­றும் காவ­லர்­கள் சம்­பவ இடத்­திற்கு வந்து இடி­பாடுகளில் சிக்கி இறந்­த­வர்­க­ளின் உடலை மீட்டு பிரேதப் பரி­சோத னைக்கு அங்­குள்ள அரசு மருத்­து வமனைக்கு அனுப்பி வைத்­த­னர்.

தீபா­வளிப் பண்­டிகை கொண்­டாடு­வ­தற்­காக சொந்த ஊர் வந்த 3 பேர் விபத்­தில் பலி­யான சம்­ப­வம் அப்­ப­குதி மக்­களை துய­ரத்­தில் ஆழ்த்­தி­யி­ருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!