சென்னை்: தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறைகளில் நடனமாடியபடி கற்றுக் கொடுப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
'எண்ணும் எழுத்தும்' என்ற திட்டத்தின் கீழ் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 10ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் நடந்த பயிற்சியில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.
"பாடல் பாடியும் நடனமாடியும் குழந்தைகளுக்கு எண்களை கற்றுத் தரும் வகையில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது. தொடக்கப் பள்ளிகளில் பத்து வயதுக்கும் குறைவான குழந்தைகளே படிக்கின்றனர். அவர்களுக்கு ஆடியும் பாடியும் கற்றுத் தரும் முறைதான் பாரம்பரியமாக பின்பற்றப்படுகிறது. உலகம் முழுதும் இந்த கல்வி முறை உள்ளது. எனவே நடனமாடி கற்றுத் தருவதில் தவறில்லை," என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

