தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊழியர்களுக்கு அசத்தலான தீபாவளி போனஸ் வழங்கிய நிறுவனம்

1 mins read
28c07834-7103-404e-a17a-fadd123d5550
தீபாவளி அன்பளிப்புகளுக்கு 1.2 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகக் கூறப்பட்டது (படம்: இந்திய ஊடகம்) -

தீபாவளியை முன்னிட்டு இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு போனஸ், அன்பளிப்புகள் வழங்குவது வழக்கம். சென்னையைச் சேர்ந்த நகைக்கடை ஒன்று வித்தியாசமான அன்பளிப்புகள் வழங்கி ஊழியர்களை அசத்தி வருகிறது.

சல்லாணி நகைக்கடை தனது ஊழியர்கள் பத்து பேருக்கு வாகனங்களும், 20 பேருக்கு மோட்டார்சைக்கிள்களும் தீபாவளி பரிசாக அளித்துள்ளது. இவற்றுக்காக கடை உரிமையாளர் சுமார் 1.2 கோடி செலவளித்ததாகக் கூறப்பட்டது. தனது கடையில் வேலைபார்ப்பவர்களைத் தன்னுடைய குடும்பமாக கருதுவதாக கடை உரிமையாளர் ஜெயந்தி லால் குறிப்பிட்டார். ஊழியர்கள் கடைக்காக கடுமையாக உழைக்கின்றனர். தீபாவளிக்காக அவர்களுக்குப் பரிசுகள் வழங்கி அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது ஒவ்வொரு நிறுவனத்தின் கடமை என்று திரு லால் கூறினார்.