சென்னை: சென்னையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான ஜெயந்தி லால் சலானி என்பவர், தனது கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் தீபாவளிப் பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள சலானி ஜூவல்லரி மார்ட் நகைக்கடையின் உரிமையாளரான ஜெயந்தி லால், ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் அன்பளிப்புகளை வழங்கி உள்ளார்.
தனது கடையில் பணியாற்றும் 10 ஊழியர்களுக்கு காரும் 20 ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிளையும் அவர் பரிசளித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயந்தி லால் சலானி செய்தியாளர்களிடம் கூறுகையில் "என் வாழ்க்கையின் கடினமான காலகட்டத்திலும் உயர்விலும் என் ஊழியர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். என் ஊழியர்கள் என்பவர்கள் எனக்கு இரண்டாவது குடும்பம் போன்றவர்கள்.
"எனது தீபாவளிப் பரிசால் என் ஊழியர்கள் மேலும் ஊக்கமடைவார்கள், அவர்களுக்கு நிச்சயமாக சிறப்பான நாளாக வரும் தீபாவளி அமையும்.
"கடினமாக உழைத்து நான் லாபம் ஈட்டுவதற்கு உதவியவர்கள் என் ஊழியர்கள் மட்டுமல்ல, என் குடும்பத்தில் ஒருவராக நினைப்ப தால் பரிசை வழங்கியுள்ளேன்.
"என்னைப் போலவே ஒவ்வொரு கடை உரிமையாளரும் தனது ஊழியரை மதித்து, அவர்களுக்கு ஏதாவது பரிசு வழங்கிட வேண்டும்" எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
என் ஊழியர்களை நான் ஊழியர்களாகப் பார்ப்பதில்லை. அவர்களையும் என் குடும்ப உறுப்பினராகவே பார்க்கிறேன். என் குடும்பத்தினருக்கு
வழங்குவது போலவே
அவர்களுக்கும்
தீபாவளிப் பரிசு வழங்கினேன்.
நகைக்கடை உரிமையாளர்
ஜெயந்தி லால் சலானி

