சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியது: இருக்கைகளில் மாற்றமில்லை என தகவல் பாதுகாவலர்கள் சூழ வந்த ஒபிஎஸ்; இபிஎஸ் புறக்கணிப்பு

2 mins read
df79c4ec-be01-4643-aa16-ae4f5c0cea0a
-

சென்னை: தமி­ழக சட்­ட­மன்­றக் கூட்­டத்­தொ­டர் கடந்த ஆறு மாதங்­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் கூடி­யது. சென்­னைத் தலை­மைச் செய­ல­கத்­தில் இதனைச் சட்­டப்­பே­ர­வைத் தலை­வர் அப்­பாவு நேற்று காலை தொடங்கி வைத்­தார்.

இதில், எதிர்க்­கட்­சித் தலை­வர் பழ­னி­சாமி, அவ­ரைச் சேர்ந்த எம்­எல்­ஏக்­கள் என ஒரு­வர் கூட பங்­கேற்­கா­மல் புறக்­க­ணித்­த­னர்.

அதே­ச­ம­யம், எதிர்க்­கட்­சித் துணைத் தலை­வர் ஓ.பன்­னீர் செல்­வம், அவ­ரது ஆத­ரவு எம்­எல்­ஏக்களான வைத்­தி­லிங்­கம், மனோஜ் பாண்­டி­யன் உள்­ளிட்­டோருடன் பாதுகாவ­லர்­கள் சூழ வந்து சட்­ட­மன்­றக் கூட்­டத்­தில் பங்­கேற்­றார்.

சட்­ட­ச­பை­யில் அவர்களுக்கு ஒதுக்கப்­பட்­டி­ருந்த இருக்­கை­க­ளி­லும் மாற்­றம் செய்­யப்­ப­ட­வில்லை எனத் தக­வல்­கள் குறிப்­பிட்­டுள்­ளன.

இதன்­மூ­லம், தமி­ழக சட்­ட­சபை யில் ஓ.பன்­னீர்­செல்­வம் எதிர்க்கட்­சித் துணைத்­த­லை­வ­ராக நீடிப்ப தாகக் கூறப்­ப­டு­கிறது.

நேற்­றைய கூட்­டத்­தில் முன்னாள் சபா­நா­ய­கர் சேடப்­பட்டி முத்­தையா, முலா­யம்­சிங் யாதவ் உள்­ளிட்ட ஏழு தலை­வர்­க­ளின் மறை­வுக்­கும் கோவை தங்­கம் உள்­ளிட்ட 10 முன்­னாள் எம்­எல்­ஏக்­களின் மறை­வுக்­கும் இரங்­கல் தெரி­விக்­கப்­பட்­டது.

அதன்­பி­றகு, இந்­தக் கூட்­டத் தொடர் நாளை (இன்று) காலை 10 மணிக்கு நடை­பெ­றும் என சபா நாய­கர் அப்­பாவு ஒத்­தி­வைத்­தார்.

இந்­தக் கூட்­டத்­தொ­டரின்போது துணை நிதி­நிலை அறிக்­கையை நிதி­ய­மைச்­சர் பழ­னி­வேல் தியாக ராஜன் தாக்­கல் செய்ய உள்­ளார்.

ஜெய­ல­லிதா மறைவு தொடர்­பான ஆறு­மு­க­சாமி விசா­ரணை ஆணைய அறிக்கை, ஸ்டெர்­லைட் துப்­பாக்­கிச்சூடு தொடர்­பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை ஆகி­யவை சட்­டப்­பே­ர­வை­யில் முன்வைக்­கப்­பட உள்­ளன.

இணைய ரம்மி உள்­ளிட்ட சூதாட்ட விளை­யாட்­டு­க­ளைத் தடை செய்­ய­வும் ஒப்­பு­தல் அளிக்­கப்­பட உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

முன்­ன­தாக எதிர்­க்கட்­சித் துணைத் தலை­வ­ராக ஆர்.பி. உத­ய­கு­மாரை அங்­கீ­க­ரித்து கூட்­டத்­தில் பங்­கேற்க அனு­ம­திக்க வேண்­டும் என பழ­னி­சாமி பேர­வைத் தலை­வரிடம் கடி­தம் கொடுத்­தி­ருந்­தார். இதனை எதிர்த்து, ஓபி­எஸ் தரப்பி­லி­ருந்­தும் கடி­தம் கொடுத்தனர்.

"எதிர்க்­கட்­சித் துணைத் தலை­வர் பதவி விவ­கா­ரத்­தில் சபா­நா­ய­கர் எடுக்­கும் முடி­வு­தான் இறு­தி­யா­னது. அவர் எடுக்கும் முடிவுக்கு நாங்­கள் கட்­டுப்­ப­டு­வோம்," என்று திருப்­ப­ரங்­குன்­றத்­தில் செய்தியாளர் களி­டம் ஓபிஎஸ் கூறி­யி­ருந்­தார்.

இத­னி­டையே, பன்­னீர்செல்வம், பழனிசாமி பத­விச் சண்­டை­யால் குழப்­பத்­தில் தவிக்­கும் அதி­மு­கவை ஓரம் கட்­டி­விட்டு அதன் இடத்­தைப் பிடிக்க பாஜக திட்­டம் வகுத்­துள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. இம்­மாதம்­ தமிழ்நாட்­டுக்கு 19 மத்­திய அமைச்­சர்­கள் வருகை தந்துள்­ள­னர்.

சட்டமன்றக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், "எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் கட்சியைக் கட்டி காப்பாற் றுவதில் உறுதியாக உள்ளோம். அதிமுக சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமானது. இது எம்ஜிஆர், ஜெயலலிதா எண்ணத்திற்கு மாறானது," என்றார்.