1,330 குறட்பாக்களை பென்சில் பகுதியில் செதுக்கி பட்டதாரி வாலிபர் சாதனை

1,330 குறட்பாக்களை பென்சில் பகுதியில் செதுக்கி பட்டதாரி வாலிபர் சாதனை

1 mins read
555b1b95-7d00-4fb9-b4cd-b43fd30db7f4
தனது படைப்புகளுடன் அரவிந்தன். -
multi-img1 of 2

சீர்காழி: சீர்காழி அருகே அர விந்தன் என்ற பட்டதாரி இளையர் ஒருவர், மிகச்சிறிய அளவிலான சிற்பங்களைச் செதுக்கி பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

அத்துடன், 1,330 குறட்பாக்களை யும் பென்சிலில் எழுதப் பயன்படும் கருப்புக் குச்சி மீது செதுக்கி சாதனை படைத்துள்ளார்.

இந்த எழுத்துகளை நம் கண்களால் பார்க்க இயலாது. விழியாடி (லென்ஸ்) மூலமாகவே பார்க்கமுடியும் என்றும் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம், சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தன். ஏறக்குறைய 4,000 ஓவியங்களை இதுவரை வரைந்துள்ள இவர், சோப்பு, சுண்ணக் கட்டி போன்ற வற்றைக் கொண்டும் பல்வேறு உருவங்கள், எழுத்துகளைச் செதுக்கி தொடர்ந்து தன் கலைத் திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

சுண்ணக் கட்டியில் 'அ' என்ற எழுத்துகளை 1,330 எண்ணிக்கை யில் மிகவும் நுணுக்கமாக வெட்டி எடுத்து அவற்றை வைத்து திரு வள்ளுவரின் உருவத்தை உருவாக்கி உள்ளார். அவரது சாதனையை 'சோழன் புக் ஆப் ரெக்கா்ட்ஸ்' நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி உள்ளது.