'துப்பாக்கி உரிமம் தந்தால்தான் 30 பேருக்கு திருமணம் நடக்கும்'

'துப்பாக்கி உரிமம் தந்தால்தான் 30 பேருக்கு திருமணம் நடக்கும்'

2 mins read
d5223d3c-208a-497c-9728-da5b6e878789
-

சேலம்: துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்காததால் 30 நரிக்குறவர் இன வாலிபர்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளனர்.

இந்த அனுமதியை வழங்கினால் மட்டுமே எங்களது சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்குத் திரு மணம் நடக்கும் என்பதால் அதற்கு உதவவேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் மனு அளித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியா பட்டணம், காரிப்பட்டி, வாழப்பாடி, தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நரிக்குறவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

இச்சமூகத்தினர் கௌரவத்திற் காகவும் தங்கள் சமுதாயத்தின் அடையாளமாகவும் துப்பாக்கி வைத்துக்கொள்வது வழக்கம்.

இப்போதைய காலகட்டத்தில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் அனைவரும் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருக் கக்கூடாது என அதிகாரிகள் பறிமுதல் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், பத்துக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், தாரமங்கலத்தில் 6 பேருக்கும் அயோத்தியா பட்ட ணத்தில் 10 பேருக்கும் நாட்டுத் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கவேண்டும் எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சங்கர் செய்தியாளர்களிடம் கூறு கையில், "அயோத்தியா பட்டணம் பகுதியில் 50 குடும்பத்தினர் வசிக்கி றோம். நாங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள வில்லை. எங்கள் சமுதாய வழக்கப் படி துப்பாக்கி வைத்திருக்கும் ஆண் மகனுக்கு மட்டுமே திருமணம் நடைபெறும். திருமணத்தின்போது, துப்பாக்கியுடன் மணமகள் கழுத்தில் ஊசிமணி, பாசிமணி கொண்டு தாலி கட்டுவது எங்களின் சமுதாய மரபாக உள்ளது. இதற்காகவே துப்பாக்கி உரிமம் வழங்கும்படி கேட்கிறோம்," எனக் கூறினார்.

எங்கள் சமுதாய வழக்கப்படி துப்பாக்கி வைத்திருக்கும் ஆண் மகனுக்கு மட்டுமே திருமணம் நடைபெறும். துப்பாக்கி இல்லாததால் 30 இளைஞர்களுக்கு திருமணம் ஆகாமல் உள்ளது. எனவே உரிமம் வழங்கி உதவவேண்டும்.

நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சங்கர்