விபத்தில் அதிமுக பிரமுகர்கள் உட்பட மூவர் மரணம்

விபத்தில் அதிமுக பிரமுகர்கள் உட்பட மூவர் மரணம்

1 mins read
b47af8df-9596-4ef7-aa20-a9f9f5b69cf7
-

பூந்­த­மல்லி: வண்­ட­லூர்-மீஞ்­சூர் சாலையில் அதி­வே­க­மாக சென்றுகொண்­டி­ருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலை­யோர இரும்புத் தடுப்பின் மீது மோதி, அந்தரத்தில் பறந்து அங்கிருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்தனர்.

விபத்­தில் சிக்­கி­ய­வர்­கள் கும்­மி­டிப்­பூண்­டியைச் சேர்ந்த ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு என்­ப­தும் சகோ­த­ரர்­களான இருவரும் அதி­மு­கவைச் சேர்ந்த தொழி­ல­தி­பர்­கள் என்­ப­தும் தெரியவந்­தது. இவர்களுடன் சுதாகர் என்பவரும் உயிரிழந்தார்.

விபத்தில் படுகாயம் அடைந்த இருவர் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து பூந்தமல்லி காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.