நியாயவிலைக் கடைகளில் கைரேகையைப் பயன்படுத்தி மக்கள் பொருள்களை வாங்குகின்றனர். இதுபோல் கைரேகை 'ஸ்கேன்' செய்வதில் சிலருக்குப் பிரச்சினை ஏற்படுகிறது. இந்தச் சிக்கலைத் தவிர்க்க கண் கருவிழியைச் சரிபார்த்த பின்னர் பொருள்களை வழங்கும் திட்டம் சென்னை திருவல்லிக்கேணியிலும் அரியலூர் மாவட்டத்திலும் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆகியோர் இந்தத் திட்டத்தை திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் தொடங்கி வைத்தனர். மக்களின் வரவேற்பைப் பொறுத்து மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. படம்: ஏஎஃப்பி
கண் கருவிழி சரிபார்ப்புத் திட்டம் மூலம் பொருள்கள் விற்பனை
1 mins read
-

