நில அபகரிப்பு, கடத்தல்: பெண் கவுன்சிலர் மீது புகார்

நில அபகரிப்பு, கடத்தல்: பெண் கவுன்சிலர் மீது புகார்

2 mins read
17990fdd-3804-4987-b92d-47a77ad19f34
-

சென்னை: திமுக பெண் கவுன்­சி­லர் உட்­பட பத்து பேர் மீது கடத்­தல் வழக்கு பதி­வாகி உள்­ளது. தொழி­ல­தி­ப­ரைக் கடத்தி ரூ.25 கோடி மதிப்­புள்ள நிலத்தை அப­க­ரித்­த­தாக அவர்­கள் மீது சென்னை காவல்­துறை குற்­றம்­சாட்டி உள்­ளது.

சென்னை அருகே உள்ள சோழிங்­க­நல்­லூரை சேர்ந்­த­வர் அமர்­ ராம். 53 வய­தான இவர், தாம் நாவ­லூர் பகு­தி­யில் உள்ள 58 சென்ட் நிலத்தை கிருஷ்­ண­மூர்த்தி என்­ப­வ­ரி­டமிருந்து வாங்கி உள்ளார். அந்­நி­லத்­தின் தற்­போதைய மதிப்பு ரூ.25 கோடி என்று கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், காவல்­து­றை­யில் புகார் அளித்­துள்­ளார் அமர் ­ராம்.

தாம் விற்ற நிலத்தை திரும்­பக் கேட்டு கிருஷ்­ண­மூர்த்தி தமக்கு மிரட்­டல் விடுத்­த­தா­க­வும் இது­தொடர்­பாக நீதி­மன்­றத்­தில் வழக்கு நடந்து வரு­வ­தா­க­வும் தமது புகார் மனு­வில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இந்­நி­லை­யில், நில விவ­கா­ரத்தைப் பேசித் தீர்க்­க­லாம் என்று கூறி, சென்னை கடற்­க­ரைப் பகுதிக்கு வரு­மாறு வழக்­க­றி­ஞர் ஒரு­வர் மூலம் அழைப்பு விடுத்­த­னர். அங்கு சென்­ற­போது அடை­யா­ளம் தெரி­யாத சிலர் என்­னைக் கத்­தி­மு­னை­யில் மிரட்டி காரில் கடத்­திச் சென்­ற­னர்.

"பின்­னர் திருப்­போ­ரூர் சார்­ப­தி­வா­ளர் அலு­வ­ல­கத்­தில் வைத்து, ஏற்­கெ­னவே என்­னி­டம் விற்ற நிலத்தை வலுக்­கட்­டா­ய­மாக மீண்­டும் எழுதி வாங்­கிக் கொண்­ட­னர்.

"கிருஷ்­ண­மூர்த்தியும் அவரது மனை­வி­யும் சென்னை மாநகராட்சி 124வது வார்டு திமுக கவுன்­சி­லரு­மான விமலா உள்­ளிட்ட பத்து பேர் சேர்ந்து இச்செய­லில் ஈடு­பட்­ட­னர். பிறகு என்னை அடித்து விரட்டி விட்­ட­னர்," என்று அமர்­ராம் புகார் தெரி­வித்­துள்­ளார். இதை­ய­டுத்து கவுன்­சி­லர் விமலா உள்­ளிட்­டோர் மீது வழக்­குப்­ப­தி­வாகி உள்­ளது.