மதுரை: தமிழகப் பள்ளிகளில் ஆசிரியர், பெற்றோரை மாணவர்களே தாக்கும் சூழல் காணப்படுவதால் மாணவர்களை நல்வழிப்படுத்த நன்னெறிக் கல்வி அவசியம் என்று மதுரை உயர் நீதிமன்றம் கூறி உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
"திருக்குறள் இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தக் கூடியது. ஐந்து திருக்குறளை பொருள் உணர்ந்து படித்தாலே போதும், மாணவர்களை நல்வழிப்படுத்த முடியும். மேலும், 108 அதிகாரங்களில் உள்ள 1,050 குறள்களை மாணவர்களுக்கு கட்டாயம் கற்பிக்க வேண்டுமென அரசாணையில் உள்ளது," என நீதிபதிகள் தெரிவித்தனர்.

