40 நிமிடங்கள் பனிக்குளியல்: தமிழக வீரர் சாதனை

40 நிமிடங்கள் பனிக்குளியல்: தமிழக வீரர் சாதனை

1 mins read
9ac7e757-eaf1-41b1-920c-6791b150fccf
லண்டனைச் சேர்ந்த கரோலிஸ் (மேல் படம்), தந்த குறிப்புகளைப் பின்பற்றி பனிக் குளியல் சாகச நிகழ்வை நடத்திக் காட்டியுள்ளார் தமிழக வீரர் கண்ணன்.அவருக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ள னர். படங்கள்: தமிழக ஊடகம் -

குமரி: கன்­னி­யா­கு­ம­ரி­யில் பனிக்குளி­யல் மேற்­கொள்­ளும் போட்டி நடை­பெற்­றது. இதில் நாகர்­கோ­வி­லைச் சேர்ந்த முது­கலைப் பட்­ட­தா­ரி­யான 37 வய­தான கண்­ணன், சுமார் நாற்­பது நிமி­டங்­கள் வரை பனிக்­கு­வி­ய­லில் அமர்ந்து சாதனை படைத்­தார்.

முன்­ன­தாக ஒரு குளி­யல் தொட்­டி­யில் நிரப்­பப்­பட்­டி­ருந்த ஐஸ் கட்­டிகளில் எவ்­வாறு நீண்ட நேரம் அமர்ந்து தாக்­குப்­பி­டிக்க இய­லும் என்­பது பற்றி லண்­ட­னைச் சேர்ந்த கரோ­லிஸ் சில குறிப்­பு­களை வழங்­கி­னார்.

உடற்­ப­யிற்சி நிலை­யம் நடத்தி வரும் கண்­ணன் பல்­வேறு சாக­சப் போட்­டி­களில் பங்­கேற்று சாதித்து இரும்பு மனி­தன் என்ற பட்­டம் பெற்­றுள்­ளார்.

உடல் வலு போட்­டி­யில் எட்டு முறை மாநில அள­வில் இரண்­டாம் இடத்­தை­யும், தேசிய அள­வில் மூன்று முறை இரும்பு மனி­தர் பட்­ட­மும் பெற்ற இவர், 9.5 டன் எடை­யுள்ள லாரியை 90 மீட்­டர் இழுத்து உலக சாதனை படைத்­துள்­ளார். மேலும், 270 கிலோ எடை கொண்ட 2 இரு சக்­கர வாக­னங்­களை தோள் மீது வைத்து 42 மீட்­டர் தூக்­கிச் சென்­ற­தும் இவ­ரது சாத­னை­யா­கும்.