மது அருந்தியவர் ஓட்டும் வாகனத்தில் பயணம் செய்பவர் மீதும் நடவடிக்கை

2 mins read
a0b686d1-1a4b-4b3e-9754-c82bb607b36b
புதிய போக்குவரத்து விதிகளின்கீழ் பல்வேறு பிரிவுகளில் அபராதத் தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன. படங்கள்: இணையம் -
multi-img1 of 4

சென்னை: சென்னை சாலைப் போக்­கு­வ­ரத்து விதி­களில் மாற்­றம் செய்­யப்­பட்டு அப­ரா­தத் தொகை­கள் உயர்த்­தப்­பட்­டுள்­ளன. இனி மது அருந்­தி­விட்டு வாக­னம் ஓட்­டு­ப­வ­ரு­டன் பய­ணம் செய்­ப­வர் மது அருந்­தா­மல் இருந்­த­போ­தும் அவ­ருக்­கும் அப­ரா­தம் விதிக்­கப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இரு­சக்­கர வாக­னத்­தில் வாகன ஓட்­டு­நர் குடித்­தி­ருந்து பின்­னால் அமர்ந்­தி­ருக்­கும் நபர் மது குடிக்­கா­மல் இருந்­தா­லும் ஓட்­டு­ந­ருக்கு அப­ரா­தம் விதிப்­ப­து­போல பின்­னால் அமர்ந்­தி­ருப்­ப­வ­ருக்­கும் அப­ரா­தம் விதிக்­கப்­படும் என சென்னை பெரு­ந­க­ரக் காவல்­துறை அறி­வித்து உள்­ளது.

ஆனால், சவாரி செல்­லும் ஆட்டோ, டாக்­சி­யில் ஓட்­டு­ந­ருக்கு மட்­டும் அப­ரா­தம் விதிக்­கப்­படும்.

மாற்­றங்­கள் நேற்று முதல் அம­லுக்கு வந்­தன.

இவ்­வே­ளை­யில், சாலை­களில் அவ­சர மருத்­துவ உதவி வாக­னம் (ஆம்­பு­லன்ஸ்), தீய­ணைப்பு வாக­னம் போன்ற அவ­ச­ர­கால வாக­னங்­க­ளுக்கு வழி­வி­டத் தவ­றி­னால் ரூ.10 ஆயி­ரம் அப­ரா­தம் விதிக்­கப்­படும் என்­றும் தமி­ழக அரசு வெளி­யிட்­டுள்ள அர­சா­ணை­யில்­ தெ­ரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், ஆபத்தை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் வாக­னங்­களை இயக்­கி­னால் ரூ.10,000, வாகன உரி­மம் இல்­லை­யென்­றால் ரூ.5000 அப­ரா­த­மாக விதிக்­கப்­படும் என்­றும் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தலைக் கவ­சம் (ஹெல்­மெட்) அணி­யா­மல் இரு­சக்­கர வாக­னம் ஓட்­டி­னால் ரூ.100க்கு பதில் இனி ரூ.1,000 அப­ரா­தம் விதிக்­கப்­படும்.

தேவை­யில்­லா­மல் வாகன ஒலி (ஹாரன்) எழுப்­பு­வோர், புகையை அதிக அள­வில் வெளி­யி­டும் வாக­னங்­களை ஓட்­டு­வோ­ருக்கு ரூ.1,000 அப­ரா­தம்.

சாலை­யில் வாக­னப் பந்­த­யம் அல்­லது சாக­சங்­களில் ஈடு­பட்­டால் ரூ.10,000 அப­ரா­தம் செலுத்த நேரி­டும். கைத்­தொ­லை­பே­சி­யில் பேசிக்­கொண்டோ அதி­வே­க­மா­கவோ வாக­னம் ஓட்­டி­னால் இனி ரூ.1000க்கு பதில் ரூ.10,000 அப­ரா­தம் விதிக்­கப்­படும்.

சோத­னை­யின் போது ஓட்­டு­நர் உரி­மத்தை தர இய­லா­விட்­டால் ரூ.1500 அப­ரா­தம் செலுத்தவேண்டும்.

புதிய விதிகளின்கீழ், காப்பீடு செய்யாத வாகனத்தை இயக்கினால் 4,000 ரூபாயும் பதிவு செய்யப்படாத வாகனத்தை இயக்கினால் 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.