கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள நாகராஜகண்டிகை எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழு வயது ஹேமஸ்ரீ (படம்).
தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் இச்சிறுமி, கடந்த மூண்டு ஆண்டுகளாக கும்மிடிப்பூண்டியில் உள்ள யோகாசனப் பள்ளியில் தனிப்பட்ட முறையில் யோகாசனம் பயில்கிறார்.
அண்மையில் இவர் பூர்ண கபோடாசனம் எனும் ஆசனத்தில் ஒரு நிமிடத்தில் 78 முறை கழுத்துடன் இரு கால்களை இணைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவரது சாதனை, 'வேல்ட்வைட் புக் ஆப் ரெக்கார்ட்', 'இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்', 'அசிஸ்ட் உலக சாதனை' என மூன்று உலக சாதனைப் புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது.

