ராமேசுவரம்: பாம்பன் பாலத்தில், நேற்று அதிகாலை ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் திருச்சியில் இருந்து ராமேசுவரம் நோக்கிச் சென்ற அரசுப்பேருந்தும் ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஓட்டுநர்கள் உட்பட இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று அதிகாலை பெய்த மழையால் பாம்பன் பாலத்தில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இதனால் பேருந்துகள் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.
பாம்பன் பாலத்தில் நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்
1 mins read
விபத்தால் பாம்பன் பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாம்பன் பாலத்தில் கடந்த பத்து நாள்களில் நடந்த இரண்டாவது விபத்து இது என்பதை ஊடகங்கள் சுட்டியுள்ளன. படம்: இந்திய ஊடகம் -

