பிளாஸ்மாவுக்குப் பதில் பழச்சாறு ஏற்றப்பட்ட நோயாளி மரணம்

பிளாஸ்மாவுக்குப் பதில் பழச்சாறு ஏற்றப்பட்ட நோயாளி மரணம்

1 mins read
b30b9917-719c-44b9-a45b-db1ae983e987
-

லக்னோ: உத்­த­ரப்­ பி­ர­தேச மாநி­லம், பிர­யாக்­ராஜ் பகு­தி­யில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் டெங்­கிக் காய்ச்­ச­லால் பாதிக்கப்­பட்ட பிர­தீப் பாண்டே என்ற ஆட­வர் அனு­மதிக்­கப்­பட்­டார்.

அவ­ரது உடல்­நிலை மிகவும் மோச­மான நிலை­யில் இருந்ததால், ரத்த அணுக்­களை அதி­க­ரிக்க அவ­ரது உட­லில் பிளாஸ்மா என்ற ரத்த நீர்­மத்தை ஏற்­றி­யுள்­ள­னர். ஆனால், அதன்­பி­ற­கும் அவ­ரது உடல்­நிலை மேலும் மோச­மா­ன­தால் அவர் உயி­ரி­ழந்­தார்.

இந்­நி­லை­யில், பிர­தீப்­புக்கு 'டிரிப்ஸ்' மூலம் ஏற்­றப்­பட்­டது பிளாஸ்மா ரத்த நீர்­மம் அல்ல என்­ப­தும் அது ஆரஞ்சு பழச்­சா­று­தான் என்­ப­தும் தெரி­ய­வந்­துள்­ளது.

ரத்­தம் என்று விற்­கப்­பட்ட பழச்சாறை 'டிரிப்ஸ்' மூலம் நோயா­ளிக்கு நரம்பு வழியே ஏற்­றி­ய­தில் பிர­தீப் உயி­ரி­ழந்­தார்.

இது­கு­றித்து உரிய நட­வடிக்கை எடுக்கவேண்­டும் என உற­வி­னர்­கள் கோரிக்கை வைத்­துள்­ள­னர்.

இச்சம்­ப­வத்­தைத் தொடர்ந்து மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்றுவந்த நோயா­ளி­களை வேறு மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு மாற்றி, மருத்­து­வ­ம­னையை மூடி அதி­கா­ரி­கள் முத்­திரை வைத்­துள்­ள­னர்.