சென்னை: மத்திய அரசின் 'அனை வருக்கும் வீடு' திட்டத்தை இந்திய அளவில் சிறப்பாகச் செயல்படுத்தி வரும் தமிழகம் மூன்றாம் இடத்தைப் பிடித்து விருதை வென்றுள்ளது.
குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விழா வில், தமிழகத்தைப் பாராட்டி, பிரதமர் மோடி வழங்கிய விருதை ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெற்றுக்கொண்டார்.
மத்திய அரசின் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் 'அனைவருக்கும் வீடு' திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரு கிறது.
இந்நிலையில், இத்திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வரும் மாநிலங்கள், யூனியன் பிரதே சங்கள், உள்ளாட்சி அமைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் 'பிரத மரின் ஆவாஸ் யோஜனா விருது கள் 2021 மற்றும் 150 நாள் சவால் கள்' என்ற விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், மாநகராட்சிகளில் மதுரை மாநகராட்சி மூன்றாவது இடமும் பேரூராட்சிகள் பிரிவில் கோவை மாவட்டம், பெரிய நெகமம் பேரூராட்சி ஐந்தாவது இடமும் பெற்றதற்காகவும் விருதுகள் வழங்கப்பட்டன.

