விபத்தில் சிக்கிய அவசர சிகிச்சை வாகனம்: தாய், கர்ப்பிணி பலி

விபத்தில் சிக்கிய அவசர சிகிச்சை வாகனம்: தாய், கர்ப்பிணி பலி

1 mins read
7f8f9ec7-3721-44e4-87dc-7ec9dc2e3828
-

சிவகங்கை: சிவகங்கை, செங்குளம் பகுதியில் அவசர சிகிச்சை வாகனம் மரத்தில் மோதியதில் பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண், அவரது தாய் உள்ளிட்டோர் உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம், நெஞ்சத்தூரைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி நிவேதா, 20. இவருக்கு பிரசவ வலி ஏற்பட சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது விபத்து நேர்ந்தது. படுகாயம் அடைந்த வாகன ஓட்டுநர், உதவியாளர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.