'ஜெயலலிதாவின் நாற்காலி மீது சசிகலாவுக்கு ஆசை இருந்தது'

'ஜெயலலிதாவின் நாற்காலி மீது சசிகலாவுக்கு ஆசை இருந்தது'

1 mins read
b5e1d10e-08ce-4d14-819e-67633f3af115
-

சென்னை: என் அத்தை ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்புடைய அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து, தக்க தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் என தமிழக அரசை ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா (படம்) வலியுறுத்தி கேட்டுக்கொண்டு உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் களிடம் அவர் கூறியபோது, "என் அத்தை உயிரிழப்பதற்கு அவரைச் சுற்றி இருந்தவர் களே காரணமாக இருந்து உள்ளனர். ஜெயலலிதாவிடம் அளித்த உறுதிமொழியையும் மீறி அவரது இருக்கையில் அமர்வதற்கு சசிகலா ஆசைப் பட்டார். அதன் காரணமாகவே ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பது எனது குற்றச்சாட்டு.

"சசிகலாவுக்கு இப்போதும் காவலர்கள் பலரும் நெருக்க மானவர்களாக இருக்கலாம் என்பதால், நீதிபதி ஆறுமுக சாமி ஆணையத்தின் அறிக்கையின்படி நேர்மை யான காவலர்களை நியமித்து விசாரணை நடத்தவேண்டும்," என தீபா கோரியுள்ளார்.