தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: நால்வர் இடைநீக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: நால்வர் இடைநீக்கம்

2 mins read
954eece5-0383-486d-a37f-befa37825fb6
-

தூத்­துக்­குடி: தூத்­துக்­குடி துப்­பாக்­கிச்­சூடு சம்­ப­வம் தொடா்பாக, காவல் உதவி ஆணையா் உள்­பட நால்­வர் பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்டு, நட­வ­டிக்கை எடுக்­கப் பட்­டுள்­ளது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக ஓய்­வு­பெற்ற உயர் நீதி­மன்ற நீதி­பதி அருணா ஜெக­தீ­சன் ஆணை­யத்­தின் விசா­ரணை அறிக்கை, கடந்த 18ஆம் தேதி தமி­ழக சட்­டப்­பேர வைக் கூட்­டத்­தொ­ட­ரில் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

அறிக்­கை­யில், துப்­பாக்­கிச்­சூடு சம்­ப­வத்­தின்­போது 13 பேர் உயி­ரி­ழந்­தது தொடர்­பாக, அப்­போ­தைய ஐஜி சைலேஷ் குமாா் யாதவ், தூத்­துக்­குடி எஸ்பி மகேந்­தி­ரன், டிஎஸ்பி லிங்க திரு­மா­றன், தூத்­துக்­குடி மாவட்­டம், புதுக்­கோட்டை காவல் நிலைய ஆய்­வாளா் திரு­மலை உட்­பட காவல்­து­றை­யைச் சோ்ந்த 17 போ் மீது நட­வ­டிக்கை எடுக்க பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதைத்­தொ­டர்ந்து, சம்­பந்­தப்­பட்ட காவ­லர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்க காவல்­துறை தலைமை இயக்­குநர் சி.சைலேந்­தி­ர­பாபு உத்த­ர­விட்டார்.

இதை­ய­டுத்து, சம்­ப­வம் நடந்த சம­யத்­தில் காவல் ஆய்­வா­ள­ராக இருந்த திரு­மலை பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்டாா்.

இவர், திரு­நெல்­வே­லி­யில் சமூக நீதி, மனித உரி­மை­க­ளுக்­கான பிரி­வில் உதவி ஆணை­ய­ரா­கச் செயல்­பட்டு வரு­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இதே­போல், தூத்­துக்­குடி ஆட்­சியா் அலு­வ­ல­கத்­தின் முன்பு பணி­யிலிருந்த சுட­லைக்­கண்ணு, சங்கா், சதீஷ் ஆகிய மூன்று காவ­லர்­களும் பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்­டனா்.

இத­னி­டையே, பொது­மக்­கள்­தான் காவல்­து­றை­யி­னரைத் தாக்­கி­ய­தாக நடி­கர் ரஜி­னி­காந்த் கருத்து தெரி­வித்­தி­ருந்­தார். ஆனால், ஆணை­யத்தின் அறிக்­கை­யில் தவ­று­கள் அனைத்­தும் காவல்­துறை மீது­தான் எனக் கூறப்­பட்­டுள்­ளது.

எனவே, இது­கு­றித்து கருத்து தெரி­வித்த ரஜி­னி­காந்த் தனது வருத்­தத்தை தெரி­விக்­க­வேண்­டும் என ஸ்டெர்­லைட் ஆலைக்கு எதி­ரான மக்­கள் இயக்­கத்­தைச் சேர்ந்த பேரா­சி­ரியை பாத்­திமா பாபு வலி­யு­றுத்தி உள்­ளார்.

அத்­து­டன், அப்­போ­தைய முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி தொலைக்­காட்­சி­யைப் பார்த்­து­தான் துப்­பாக்­கிச்­சூடு பற்றி தெரிந்­து­கொண்­டேன் எனக் கூறி­ய­தும் பொய் என அம்­பலப்­ப­டுத்­தி­ உள்ளது ஆணை­யத்­தின் அறிக்கை. தூத்­துக்­குடி போராட்­டம், துப்­பாக்­கிச்­சூடு பற்­றிய ஒவ்­வொரு தக­வ­லும் நொடிக்கு நொடி காவல்­துறை சார்­பில் அவ­ருக்­குத் தெரி­விக்­கப்­பட்­டதாகவும் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், முன்­னாள் முதல்­வர் பழ­னி­சா­மியை விசா­ரணை வளை­யத்­திற்­குள் கொண்­டு­வ­ரு­வது பற்றி முதல்­வர் ஸ்டா­லின் தீவி­ர­மாக ஆலோ­சித்து வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.