சென்னை: தீபாவளித் திருநாளை முன்னிட்டு சென்னை சைதாப் பேட்டை தொகுதியில் முதியோர், கணவரை இழந்த கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு விலையில்லா வேட்டி-சேலைகளை நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் நேற்று வழங்கினார்.
அதன்பிறகு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வீடு தேடிச் சென்று மக்கள் குறைகளைக் கேட்டறியும் "நடக்கலாம் வாங்க, கோரிக்கை மனுக்களைத் தாங்க" திட்டத்தின் கீழ், மக்களின் அடிப்படை பிரச்சி னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டு வருவதாகத் தெரி வித்தார். இதேபோல், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகளை வழங்கியதாக தன் டுவிட்டர் பக்கத்தில் தகவல் தொழல்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவிட்டுள்ளார்.