ராணிப்பேட்டை: ஒரேசமயத்தில் காவலர்களாகப் பணியாற்றுவதற் காக மூன்று சகோதரிகள் தேர்வாகி உள்ளதை அடுத்து, ஊர் மக்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகள் கூறிவருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், கீழ்வதம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஷகிலா-வெங்க டேசன் தம்பதி. இவர்களது மகள்களான வைஷ்ணவி, நிரஞ்சனி, பிரீத்தி ஆகியோர் ஒரே நேரத்தில் காவலர் தேர்வில் தேர் வாகி, திருவள்ளூரில் காவலர் பயிற்சியை முடித்துள்ள நிலையில், விரைவில் அவர்கள் காவலர் பணியில் ஈடுபடவுள்ளனர்.
அக்கா-தங்கைகள் மூவரும் ஒரேநேரத்தில் தமிழக காவல் துறையில் சேர உள்ளதை அந்த கிராம மக்கள் கொண்டாடி வருவ துடன், பொதுமக்களும் அவர் களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

