உக்ரேன் போரை நிறுத்த வலியுறுத்தி பாம்பு, ஓணானுடன் இசை விருந்து

திரு­நெல்­வேலி: தவில், ட்ரம்ஸ், பியானோ உள்­ளிட்ட இசைக் கரு­வி­கள் மீது பாம்பு, ஓணான் உள்­ளிட்ட ஊர்­வ­னவை இழைந்தோட, நெல்­லை­யைச் சேர்ந்த 'தி இந்­தி­யன் பீட்­டில்ஸ்' இசைக்­கு­ழு­வி­னர் இசை 'ஆல்­பம்' தயா­ரித்து வெளி­யிட்­டுள்­ள­னர்.

கின்­னஸ் இசைக் குழு­வி­ன­ரின் இசை­யில் உயி­ரி­னங்­கள் மயங்கி நிற்­கும் காணொளி பல­ரை­யும் ஈர்த்து வரு­கிறது.

ரஷ்யா-உக்­ரேன் போரை உட­னடி யாக நிறுத்த வலி­யு­றுத்­தி­யும் உல­கில் அன்­பும் சமா­தா­ன­மும் நில­வ­வும் அனைத்து உயிர்­க­ளி­டத்­தி­லும் அன்பு செலுத்­த­வேண்­டும் என்பன குறித்து விழிப்­புணர்வு ஏற்­ப­டுத்­தும் வகையில் இசைக்­குழுவினர் புதிய இசை ஆல்­பத்தை வெளி­யிட்டு உள்­ள­னர்.

நெல்லை மாவட்­டம், வடக்­கன் குளத்­தைச் சேர்ந்­த­வர் முனை­வர் அப்­துல் ஹலீம். பல்­வேறு இசைக்­க­ரு­வி­களைப் பயன்­ப­டுத்தி, இசை­யில் சாதனை படைத்து கின்­னஸ் புத்­த­கத்­தி­லும் ஏற்­கெ­னவே இடம்­பி­டித்­தி­ருக்­கி­றார். இவர், தற்­போது பள்ளி மாணவர்­க­ளுக்கு இசை ஆசி­ரி­ய­ரா­க­வும் பணி­யாற்றி வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், ஆப்­பி­ரிக்க வகை மலைப்­பாம்­புக் குட்டி, ஓணா­னு­டன் புதிய இசைக் காணொ­ளியை வெளி யிட்­டுள்­ளார். அவ­ரு­டன் கின்­னஸ் சாதனை படைத்த மாண­வர்­களும் பங்­கேற்­றுள்­ள­னர்.

பாரம்­ப­ரிய, மேற்­கத்­திய இசைக் கரு­வி­க­ளைக் கொண்டு கலை­ஞர்­கள் படைத்த இசை விருந்­தில், பாம்­பும் ஓணா­னும் 2 மணி நேரத்­திற்­கும் மேலாக எங்­கும் நக­ரா­மல் அங்­கேயே மயங்கி நின்­றன.

மற்­றொரு கின்­னஸ் சாத­னைக்­கா­க­வும் 'தி இந்­தி­யன் பீட்­டில்ஸ்' குழு­வி­னர் இந்த இசை ஆல்­பத்தை படைத்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!