கோயம்புத்தூரில் வாகனம் ஒன்று வெடித்த சம்பவத்தை விசாரிக்க ஆறு சிறப்பு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள. ஈஸ்வரன் கோவில் தெரு எனும் முக்கிய வட்டாரத்தில் வெடிப்பு இன்று விடியற்காலை நடந்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கோயம்புத்தூரில் குவிக்கப்பட்டுள்ளனர். வாகனத்தில் இருந்த எரிவாயு கலன் வெடித்ததில் வாகன ஓட்டுநர் உயிரிழந்ததாக அம்மாநகர காவல்துறை தெரிவித்தது. அவருடைய உடல் முழுவதுமாக கருகியதால் அவரின் அடையாளம் தெரியவில்லை என்று கூறப்பட்டது. இச்சம்பவத்தை விசாரிக்க ஆறு சிறப்பு காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் கண்ணாடியால் செய்யப்பட்ட சிறுகற்கள், ஆணிகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஈஸ்வரன் கோவில் தெரு போக்குவரத்துக்கும் மக்களுக்கும் மூடப்பட்டுள்ளது. அத்தெருவில் கடை நடத்துபவர்கள் கடைகளை மூடுமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர். இதனால் 130க்கும் மேற்பட்ட கடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கோயம்புத்தூரில் வாகன வெடிப்பு: 6 சிறப்பு விசாரணை குழுக்கள் நியமனம்
1 mins read
வெடிப்பில் ஒருவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது (படம்: இந்திய ஊடகம்) -

