300 நாள்களில் சிக்கிய 383 குண்டர்கள்

300 நாள்களில் சிக்கிய 383 குண்டர்கள்

1 mins read
c11da7b8-f613-474d-a4b0-e54fdc896a68
-

சென்னை: சென்னையில் கடந்த 10 மாதங்களில் 383 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 17 பேர் குண்டர் சட்டத்தில் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டு பிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கவும் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.