ரூ.1,000 கோடியுடன் ஓட்டம்; மில்லியன் மக்கள் பரிதவிப்பு

ரூ.1,000 கோடியுடன் ஓட்டம்; மில்லியன் மக்கள் பரிதவிப்பு

2 mins read
be9cc8bc-a0fd-4c42-80a4-9f3ccf964121
-

தீபாவளி மோசடி: ரூ.3,000க்கு ரூ.15,000 பொருள்கள் கிடைக்கும் என அறிவித்து சதி

செய்­யாறு: தீபா­வளிப் பண்­டி­கையை­ஒட்டி ரூ.3,000 செலுத்­தி­னால் ரூ.15,000க்கான பொருள்­க­ளைத் தரு­வ­தா­கக் கூறி ஒரு மோச­டிக் கும்­பல் ஏறக்­கு­றைய ஒரு மில்­லி­யன் பேரை ஏமாற்­றி­விட்­ட­தா­கக் கூறப்­படு­கிறது.

அந்த மக்­கள் மோச­டிப் பேர்­வழி­க­ளி­டம் மொத்­த­மாக ரூ.1,000 கோடி இழந்து இருக்­கி­றார்­கள் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

திரு­வண்­ணா­மலை மாவட்­டத்­தில் செய்­யாறு நக­ரில் தீபா­வளி நிதி நிறு­வ­னம் என்ற பெய­ரில் சிலர் நிறு­வ­னங்­க­ளைத் தொடங்கி ரூ.1,000 செலுத்­தி­னால் ரூ.5,000க்குப் பொருள்­கள் தரு­வ­தாக விளம்­பரப்­படுத்­தி­னர்.

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக சொன்னபடியே அவர்­கள் பொருள்­களை­யும் விநி­யோ­கித்து வந்­த­தாகத் தெரி­கிறது.

இதை­ய­டுத்து தவ­ணைத் தொகையை ரூ.3,000 செலுத்­தி­னால் தீபா­வ­ளிக்கு ரூ.15,000 மதிப்­புள்ள பொருள்­கள் கிடைக்­கும் என்­றும் ரூ.50,000 செலுத்­தி­னால் இரண்­டரை பவுன் தங்க நகை­யும் வெள்ளி நகை­களும் பாத்­தி­ரப் பண்­டங்­களும் இதர அன்­ப­ளிப்­புப் பொருள்­களும் வழங்­கப்­படும் என்றும் அந்த நிறு­வனங்­கள் பர­ப­ரப்­பாக விளம்­ப­ரங்­களை வெளி­யிட்­டன.

அவற்றை நம்பி ஏரா­ள­மான மக்கள் போட்­டிபோட்­டுக் கொண்டு பணத்­தைக் கட்­டி­ய­தா­கக் கூறப்படு­கிறது.

சென்னை, காஞ்­சி­பு­ரம், திரு­வண்­ணா­மலை, ராணிப்­பேட்டை, வேலூர் மாவட்­டங்­கள் உட்­பட தமிழகம் முழு­வ­தை­யும் சேர்ந்த ஏறக்­கு­றைய 1 மில்­லி­யன் பேர் ரூ.1,000 கோடி வரை அந்த மோச­டிப்­பேர்­வழி­க­ளி­டம் கொடுத்­த­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

இந்த நிலை­யில், தீபா­வளி நெருங்­கி வந்ததை அடுத்து அந்த நிறு­வ­னங்­களும் அவற்­றின் ஊழியர்­களும் திடீ­ரென சில நாள்களுக்கு முன் தலை­ம­றை­வா­கி­விட்­ட­னர்.

பணம் போட்­ட­வர்­கள் செய்­வ­தறி­யாது தவித்து பொரு­ளி­யல் குற்­றப்­பி­ரிவு காவல்­து­றை­யி­டம் புகார் தாக்­கல் செய்து இருப்பதாக தமி­ழக ஊட­கங்­கள் பர­ப­ரப்­பாக செய்தி வெளி­யிட்டுள்ளன.