சென்னை: மாநில அரசுகள் தொலைக்காட்சி சேவை வழங்க மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சு தடை விதித்துள்ளது. இதனால், தமிழக அரசு நடத்தி வரும் கல்வித் தொலைக்காட்சிக்குப் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவை பல தரப்புகளும் கண்டித்து வருகின்றன. இது மாநில அரசு அதிகாரத்தைப் பறிக்கும் செயல் என்று கூறி மக்கள் நீதி மய்யம் இதை வன்மையாகக் கண்டித்தது.

