சென்னை: நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியர் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்ட நிலையில், நான்கே மாதங்களில் தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தனர். இவர்கள் விதிமுறை களை மீறி குழந்தை பெற்றதாகவும் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் நேற்று விசாரணை நடைபெற்றதை அடுத்து, இன்று மாலை தெளிவான விளக்கம் அளிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.
இதுவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறியிருப்பது அம்பலமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விதிமீறல் உறுதியானால் மருத்துவமனை மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
மருத்துவமனையின் விளக்கத்தைப் பொறுத்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் பெறப்பட்டு அறிக்கை வெளியாகும் என கூறப்படுகிறது.

