துரிதமாக நடக்கிறது மழைநீர் வடிகால் பணி

துரிதமாக நடக்கிறது மழைநீர் வடிகால் பணி

1 mins read
837c7ead-de23-49ad-8c54-942fe16147a6
-

சென்னை: சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி இந்த ஓராண்டில் மட்டும் 964 கி.மீட்டர் அளவுக்கு நடைபெற்று உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் இதற்காக தமிழக அரசு ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

அத்துடன், நெடுஞ்சாலைத்துறை மூலமாக மழைநீர் வடிகால் வசதிகள் சென்னை நகர்ப்புறங்கள் மட்டுமன்றி, செம்மஞ்சேரி பகுதிகளிலும் நடைபெற்று வருவதாகவும் ககன்தீப் சிங் கூறினார்.