சேமிப்பை அதிகமாக்கும் வெகுமதித் திட்டம்

சேமிப்பை அதிகமாக்கும் வெகுமதித் திட்டம்

2 mins read
eb07713e-7698-4c37-b843-2d10c4403c27
-

மக்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மான 'கோல்டு ஸ்டோ­ரேஜ்', 'டோஸ்ட்டு பாக்ஸ்', 'சிங்­டெல்' போன்ற வர்த்­த­கங்­கள் உட்­பட, 1,000க்கும் மேற்­பட்ட இடங்­களில் பொருள் வாங்கு­வோர் புள்­ளி­கள் பெறு­வ­தற்­கான புதிய வெகு­ம­தித் திட்­டம் இன்­று­மு­தல் தொடங்­கு­கிறது.

'யூ ரிவார்ட்ஸ் கிளப்' என்ற இப்­பு­திய திட்­டத்தை தெமா­செக் நிறு­வனத்­தின் மிண்­டன்.ஏஐ பிரி­வும் அதன் உத்­தி­பூர்வ பங்­கா­ளி­யான 'டிஎ­ஃப்ஐ' வர்த்­த­கக் குழு­ம­மும் இணைந்து தொடங்­கி­யுள்­ளன.

திட்­டத்­தின் மூலம் 'யூ' (yuu) பங்­காளி வர்த்­த­கங்­க­ளி­ட­மி­ருந்து வாடிக்­கை­யா­ளர்­கள் புள்­ளி­களை மேலும் வச­தி­யா­க­வும் துரி­த­மா­க­வும் சேக­ரிக்க முடி­யும்.

புள்­ளி­க­ளைச் சேக­ரித்த பின்பு, கட்­ட­மைப்­பில் உள்ள சில்­லறை வர்த்­த­கத்­தி­ட­மி­ருந்து வாடிக்­கை­யா­ளர் சலு­கை­க­ளை­யும் வெகு­மதி­களை­யும் பெற­லாம்.

இதன்­படி, 200 'யூ' புள்­ளி­க­ளைக் கொண்டு வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­க­ளின் பொருட்­களில் $1 கழிவு பெற­லாம்.

திட்­டத்­தில் சேர விரும்­பு­வோர் 'யூ' செய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்து தங்கள் பெயரில் புதிய கணக்கைப் பதிவு செய்ய வேண்டும். பின்­னர் திட்­டத்­தில் இணைந்­துள்ள வர்த்­த­கங்­களில் கட்­ட­ணம் செலுத்­தும்­போது 'யூ' கியூ­ஆர் குறி­யீட்­டைக் காசா­ள­ரி­டம் காண்­பிக்க வேண்­டும்.

செலவு செய்­யும் ஒவ்­வொரு வெள்­ளிக்­கும் ஒரு புள்ளி வழங்­கப்­படும். புதிய வெகு­ம­தித் திட்­டத்தின் தொடர்­பில் 'டிபி­எஸ்' வங்கி புதி­தாக கடன் அட்டை ஒன்­றை­யும் அறி­மு­கம் செய்­துள்­ளது. 'டிபி­எஸ் யூ' அட்­டை­யைப் பயன்­ப­டுத்­து­வோ­ரால் மேலும் விரை­வா­கப் புள்­ளி­கள் சேக­ரிக்க முடி­யும்.

'பேஷன்' அட்டை அல்­லது 'பேஷன் பிஓ­எஸ்பி' பற்று அட்­டையை வைத்­தி­ருப்­போ­ரும் தளத்­து­டன் தங்­க­ளின் அட்­டை­களை இணைத்­துக்­கொள்­ள­லாம்.

தற்­போ­தைய பொரு­ளி­யல் சூழ­லில் இது­போன்ற வெகு­ம­தித் திட்­டங்­களில் சேர்ந்து பணம் சேமிக்க விரும்­பு­வ­தாக மிண்­டன்.ஏஐ நடத்­திய அண்­மைய ஆய்வு ஒன்­றில் 60% சிங்­கப்­பூ­ரர்­கள் தெரி­வித்­தி­ருந்­த­னர்.