கைப்பேசி தொடர்பான மோசடி: இருவர் மீது குற்றச்சாட்டு

கைப்­பே­சிச் சாத­னங்­கள் குறித்த 140 மோச­டிச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் இரு­வர் மீது நேற்று மோச­டிக் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன. மோச­டிச் சம்­ப­வங்­களில் மொத்­தம் $360,000க்கும் மேற்­பட்ட தொகை கையா­டப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் டியோ ஜுன் ஹாவ், 23, சியூ ஷி சிங், 25 ஆகிய இரு­வ­ரை­யும் மத்­திய காவல் பிரி­வில் தடுத்து வைக்­கு­மாறு ஆணை­யி­டப்­பட்­டது. அடுத்த மாதம் 2ஆம் தேதிக்கு இரு­வ­ரின் வழக்­கும் தள்­ளி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

இணைய வர்த்­த­கத் தள­மான 'கேரோசல்' வழி இரு­வ­ரும் இவ்­வாண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதிக்­கும் செப்­டம்­பர் 28ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் வாடிக்­கை­யா­ளர்­களை ஏமாற்­றி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

'ஐஃபோன் 14', 'ஐஃபோன் 13' கைப்­பே­சி­களை விற்­ப­தா­கக் கூறி இரு­வ­ரும் வாடிக்­கை­யா­ளர்­களை ஏமாற்­றிப் பணம் பறித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து காவ­லர்­க­ளுக்­குப் புகார்­கள் பல வந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

வர்த்­தக விவ­கா­ரத் துறை­யைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் விசா­ரணை மேற்­கொண்டு, ஏமாற்­றி­ய­தா­கக் கூறப்­ப­டு­வோ­ரின் அடை­யா­ளத்­தைக் கண்­ட­றிந்து சிங்­கப்­பூர் வந்த இரு­வ­ரை­யும் சாங்கி விமான நிலை­யத்­தில் கைது­செய்­த­னர்.

இந்­நி­லை­யில், அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட விற்­ப­னை­யா­ளர்­க­ளி­ட­மிருந்து மட்­டுமே பொருள்­கள் வாங்­கு­மாறு காவ­லர்­கள் பொது­மக்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!