ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டுகள், கல்தூண்கள் இரண்டு கண்டெடுப்பு

ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டுகள், கல்தூண்கள் இரண்டு கண்டெடுப்பு

1 mins read
a89d41f7-08ea-49bc-9e09-79eb26275632
-

கிருஷ்­ணகிரி: தேன்­க­னிக்­கோட்டை பகு­தி­யில் ராஜேந்­திர சோழன் கால கல்­வெட்­டு­களும் கல்­தூண்­களும் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­தில் இது­வரை கிடைத்­துள்ள சோழர் காலத்து கல்­வெட்­டு­களில் இதுதான் ஆக பழ­மை­யான கல்­வெட்டு என அம்­மா­வட்ட அரசு அருங்­காட்­சி­யக காப்­பாட்­சி­யர் கோவிந்­த­ராஜ் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­களில் தொல்­லி­யல் துறை­யி­னர் ஆய்வு மேற்­கொண்­டுள்­ள­னர். கீழடி­யில் நடை­பெற்ற அக­ழாய்­வுப் பணி­யின்­போது ஏரா­ள­மான அரிய பொருள்­கள் கிடைத்­தன.

இந்­நி­லை­யில், தேன்­க­னிக்­கோட்டை அருகே உள்ள மத­கொண்­டப்­பள்ளி பகு­தி­யில், மண்ணில் புதைந்­தி­ருந்த நான்­கடி உய­ரம், ஒரு அடி விட்­டம் கொண்ட நான்கு கல் தூண்­களும் கல்வெட்டு­களும் தோண்டி எடுக்­கப்­பட்­டன.

அவற்­றுள் இரண்டு கல்­வெட்­டு­கள் ராஜ­ராஜ சோழன் மகன் ராஜேந்­திர சோழன் காலத்­தைச் சேர்ந்­தவை எனத் தெரியவந்துள்ளது.

"அக்­கல்­வெட்­டு­களில் முத­லாம் ராஜேந்­திர சோழ­னைப் பற்­றிய குறிப்­பு­கள் காணப்­ப­டு­கின்­றன. அச்­ச­ம­யம் நடை­பெற்ற சம்­ப­வங்­கள் குறித்த செய்­தி­களும் இடம்­பெற்றுள்­ளன," என்று கோவிந்­த­ராஜ் தெரி­வித்­துள்­ளார்.