தீபாவளியன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலையும் குற்றச்செயல்களை யும் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார் காவல் கண்காணிப்பாளர் சுதாகர். இதன் பலனாக காஞ்சிபுரம் மக்கள் தீபாவளிப் பண்டிகையை அமைதியாகவும் விபத்துகள், குற்றச்செயல்கள் இன்றியும் கொண்டாடினர். இதையடுத்து தமக்கு ஒத்துழைப்பு வழங்கிய காவல்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் இனிப்புகள் வழங்கி நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தார்.
படம்: ஊடகம்

