எட்டு கிலோ மீட்டர் நடக்கும் மாணவர்கள்

எட்டு கிலோ மீட்டர் நடக்கும் மாணவர்கள்

1 mins read
9cf88868-dde6-43f0-8be3-fcacb0b61f6a
-

கிருஷ்­ணகிரி: பேருந்து வசதி இல்­லாத கார­ணத்­தால் கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­தில் உள்ள சில சிற்­றூர்­களைச் சேர்ந்த பள்ளி மாண­வர்­கள் நாள்­தோ­றும் பள்­ளி­யைச் சென்­றடைய சுமார் எட்டு கிலோ மீட்­டர் தூரம் நடக்க வேண்டி உள்­ள­தாக பெற்­றோர்­கள் வேதனை தெரி­விக்­கின்­ற­னர்.

பீமாண்­டப்­பள்ளி ஊராட்­சிக்கு உட்­பட்ட ஓட்­டூர், பாறை­யூர், கொல்லப்­பள்ளி, மாரி­க­வுண்­ட­னூர், சோம­நா­த­பு­ரம், கங்­க­சந்­தி­ரம் உள்­ளிட்ட கிரா­மங்­களில் விவ­சா­யம்­தான் முக்­கி­யத் தொழில்.

இக்­கி­ரா­மங்­களில் உள்ள மாண­வர்­க­ளுக்­காக தொடக்­கப் பள்ளி மட்­டுமே உள்­ளது. ஆறு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி கற்க வேண்­டு­மா­னால் எட்டு கிலோ மீட்­ட­ருக்கு அப்­பால் உள்ள அர­சுப் பள்­ளிக்­குச் செல்ல வேண்­டும்.

ஆனால் அப்­பள்­ளிக்­குச் செல்ல சாலை வசதி உள்ள போதி­லும் பேருந்­து­கள் ஏதும் இயக்­கப்­ப­டு­வ­தில்லை. இத­னால் ஓட்­டூர், பாறை­யூர், கொல்­லப்­பள்ளி, மாரி­க­வுண்­ட­னூர் ஆகிய நான்கு கிரா­மங்­களைச் சேர்ந்த இரு­நூ­றுக்­கும் மேற்­பட்ட மாண­வர்­கள் தின­மும் எட்டு கிலோ மீட்­டர் தூரம் நடந்தே பள்­ளிக்குச் சென்று திரும்­பு­கின்­ற­னர். அவ்­வாறு செல்­லும் வழி­யில் குறுக்­கி­டும் மார்க்­கண்­டேய நதி­யை­யும் அவர்­கள் கடக்க வேண்­டி­யுள்­ளது.

"மழைக் காலங்­களில் ஆற்­றில் அதிக அள­வில் தண்­ணீர் செல்லும்­போது மாண­வர்­கள் அதைக் கடக்க அஞ்­சு­கின்­ற­னர். இத­னால் பள்­ளிக்­குச் செல்­வ­தில் தாம­தம் ஏற்­ப­டு­கிறது. பேருந்து வச­தி­ இல்­லா­த­தால் பல மாண­வர்­கள் மேல்­நி­லைக் கல்­வியைத் தொடர முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது," என்று இக்­கி­ராம மக்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.