சென்னை: நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிகள் மீறப்படவில்லை என சுகாதாரத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு 2016ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி பதிவுத் திருமணம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்களின் திருமணம் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி நடந்தது.
அவர்கள் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுக்கொண்டதாக, திருமணமாகி நான்கு மாதம் சென்ற நிலையில், கடந்த 9ஆம் தேதி தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்ட விதிகள் மீறப்பட்டதாக பல்வேறு புகார்கள் தலைதூக்கின. அவை பற்றி விசாரிக்க மருத்துவம், ஊரக நலப்பணி இயக்குநர் மூலம் இம்மாதம் 13ஆம் தேதி உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் வாடகைத் தாய் முறைக்கான வழிகாட்டி நெறிமுறைகள் மீறப்படவில்லை என்று உயர்மட்டக் குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி மீது தவ றில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

