அரசாங்க உதவித் திட்டம்: மனு செய்தும் பலன் இன்றி காத்துக்கிடக்கும் 30,000 பேர்

அரசாங்க உதவித் திட்டம்: மனு செய்தும் பலன் இன்றி காத்துக்கிடக்கும் 30,000 பேர்

2 mins read
35c4957d-4047-4ecc-8e5a-1b37202c062c
-

சென்னை: தமிழ்­நாடு முழு­வ­தும் பல்­வேறு நலத்­திட்­டங்­களைத் தமிழக அரசு அமல்­ப­டுத்தி வரு­கிறது. அண்­மை­யில்­கூட உயர்­கல்வி படிப்­ப­தற்­குத் தோதாக மாணவி­க­ளுக்கு அவர்­க­ளின் வங்­கிக் கணக்­கில் ரூ.1,000 செலுத்­தும் திட்­ட­மும் தொடங்­கி­யது.

'புது­மைப் பெண்' என்ற அத்­திட்­டத்­தின் கீழ், மாண­வி­கள் பல­னடை­யத் தொடங்­கி­விட்­ட­னர். என்­றா­லும்­கூட கடந்த மூன்­றாண்டு கால­மாக நான்கு திரு­மண உத­வித் திட்­டங்­க­ளின்­கீழ் அர­சாங்­கத்­தி­டம் விண்­ணப்­பித்து இருக்­கும் ஏறத்­தாழ 30,000 பேர் இன்­ன­மும் தங்­களுக்கு எந்த உத­வி­யும் கிடைக்­க­வில்லை என்று கவலை தெரி­விக்­கி­றார்­கள்.

இவர்­க­ளுக்கு எட்டு கிராம் இலவச தங்­க­மும் ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை பண உத­வி கிடைத்­தி­ருக்க வேண்­டும் என்று அதி­கா­ர­பூர்வ தக­வல் வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. கலப்பு ­மணம் செய்­து­கொண்ட 6,000 தம்­ப­தி­ய­ரும் இவர்­களில் அடங்­கு­வர்.

புது­மைப் பெண் உத­வித் திட்­டத்­திற்கு 'மூவ­லூர் ராம­ாமிர்­தம் அம்­மை­யார் உயர்க்­கல்வி உத­வித் திட்­டம்' என்­றும் பெயர்.

அதன்­படி, அர­சுப் பள்­ளி­களில் ஐந்­தாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்­துள்ள மாணவி­களுக்கு அவர்­கள், பட்­டப் படிப்பை அல்­லது பட்­ட­யப் படிப்பை முடிக்­கும் வரை மாதா­மா­தம் ரூ.1,000 வழங்­கப்­ப­டு­கிறது.

இதற்­காக அர­சாங்­கம் ரூ.698 கோடியை இந்த ஆண்டு ஒதுக்கி இருக்­கிறது. இதன்­மூ­லம் 600,000க்கும் மேற்­பட்ட மாண­விகள் பயன் அடை­கி­றார்­கள்.

திமுக ஆட்சி பதவி ஏற்­றப் பிறகு மூவ­லூர் ராமா­மிர்­தம் அம்­மை­யார் திரு­மண உத­வித் திட்­டம் உயர் கல்வி உத­வித் திட்­ட­மாக மாற்­றப்­பட்­டது. வித­வை­க­ளின் புதல்­வி­கள், அனாதை சிறு­மி­கள், வித­வை­கள் மறு­வாழ்­வுத் திரு­ம­ணம், கலப்புத் திரு­ம­ணம் ஆகி­ய­வற்­றுக்கு உதவியாக இதர நான்கு உத­வித் திட்­டங்­களும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டன.

ஆனால், இத்­திட்­டத்­தின்­கீழ் தங்­க­ளுக்கு உதவி எது­வும் வர­வில்லை என்று 30,000க்கும் மேற்­பட்­ட­வர்­கள் தெரி­வித்து இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத­னி­டையே, இது பற்றி கருத்து கூறிய சமூக நல்­வாழ்­வுத் துறை, மாதர் மேம்­பாட்டு வாரி­யம் ஆகி­ய­வற்­றுக்­கான செய­லா­ளர் சாம்பு கல்­லோ­ளி­கர், இதற்­காக ரூ.65 கோடி ஒதுக்­கப்­பட்டு இருக்­கும் என்­றும் விண்­ணப்­ப­தா­ரர்­களுக்கு விரை­வில் உதவி கிடைக்­கும் என்­றும் கூறி­னார்.