தேவர் பிறந்த நாள்: ஆளில்லா வானூர்திகள் மூலம் தீவிரமான கண்காணிப்பு

தேவர் பிறந்த நாள்: ஆளில்லா வானூர்திகள் மூலம் தீவிரமான கண்காணிப்பு

1 mins read
99b165d4-2d69-4b55-8cdd-60bf460cac9e
-

ராம­நா­த­பு­ரம்: பசும்­பொன் முத்­து­ரா­ம­லிங்க தேவ­ரின் பிறந்­த­ நாள், குரு­பூஜை வரும் 30ஆம் தேதி கொண்­டா­டப்­ப­டு­கிறது.

அதை ஒட்டி ராம­நா­த­பு­ரம் மாவட்­டத்­தில் பலத்த பாது­காப்பு ஏற்­பாடு­கள் செய்­யப்­பட்­டு உள்­ளன.

பசும்­பொன்­னில் உள்ள முத்து­ரா­ம­லிங்க தேவர் நினை­வி­டத்­தில் இந்த ஆண்டு 115வது தேவர் பிறந்த நாள் குருபூ­ஜை­கள் மிகச்­சி­றப்­பாக நடை­பெற ஏற்­பா­டு­கள் நடந்து வரு­கின்­ற­னர்.

தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் உள்­ளிட்ட பல்­வேறு அர­சி­யல் கட்சி தலை­வர்­கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்த உள்­ள­னர். 10,000 காவல் துறை­யி­னர் பாது­காப்புப் பணி­யில் ஈடு­பட உள்­ள­னர்.

தடை செய்­யப்­பட்ட பகு­தி­கள், அனு­ம­திக்­கப்­பட்ட வழித்­த­டங்­கள் எல்­லாம் ஏற்­கெ­னவே அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

காவல்­து­றை­யின் உத்­த­ர­வு­களை மீறி செயல்­ப­டு­ப­வர்­கள் மீது கண்­காணிப்புப் படச்­சா­த­னங்­கள் மூலம் ஆய்வு செய்து கடு­மை­யான நட­வடிக்கை எடுக்­கப்­படும் என்று அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

பசும்­பொன்­னில் மூன்று ஆளில்லா வானூர்­தி­கள், 92 நிரந் தர படச்­சா­த­னங்­கள் கண்­காணிப்­பில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

இத­னி­டையே, உயர்­நீ­தி­மன்­ற உத்­த­ர­வின்­படி தேவ­ருக்கு அணி­விக்­கப்­படும் தங்கக் கவ­சத்தை வங்­கி­யில் இருந்து ராம­நா­த­பு­ரம் வரு­வாய் அதி­காரி பெற்­று­க்கொண்­டார். நினை­வி­டத்­தில் வழிபாடு செய்­யப்­பட்டு ராம­நா­த­பு­ரம் மாவட்ட வரு­வாய் அலு­வ­லர், மதுரை மாவட்ட வரு­வாய் அலு­வ­லர் உள்ளிட்ட வரு­வாய்த் துறை அதி­கா­ரி­கள் முன்­னி­லை­யில் தேவர் சிலைக்கு தங்­கக் கவ­சம் அணி­விக்­கப்­பட்­டது.

அதையடுத்து அங்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை அதிகாரிகள் 24 மணி நேர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.