நயன்தாராவுக்கு குழந்தை: மருத்துவமனைக்கு நெருக்கடி

நயன்தாராவுக்கு குழந்தை: மருத்துவமனைக்கு நெருக்கடி

1 mins read
bfa5dc7a-0498-4ff8-b321-156c2f3d28a5
-

சென்னை: நயன்­தாரா, விக்­னேஷ் சிவ­னின் இரட்­டைக் குழந்­தை­கள் பிறந்த மருத்­து­வ­ம­னை­யின் நிர்­வா­கத்­தி­டம் பல்­வேறு கேள்­வி­களை எழுப்பி தமி­ழக அரசு விளக்­கம் கேட்­டுள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

மேலும், அம்­ம­ருத்­து­வ­மனைக்கு 'சீல்' வைக்க தமி­ழக அரசு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இரட்­டைக் குழந்­தை­க­ளைப் பெற்­றெ­டுத்­த­தில், வீதி­மு­றை­கள் மீறப்­பட்­ட­தாக அண்­மை­யில் ஒரு சர்ச்சை எழுந்­தது. இதை­ய­டுத்து, தமி­ழக சுகா­தா­ரத்­துறை விசா­ர­ணைக் குழு ஒன்றை அமைத்து இந்த சர்ச்சை குறித்து விசா­ரணை மேற்­கொண்­டது. அதன் மூலம் விதி­மீ­றல்­கள் மீறப்­ப­ட­வில்லை எனத் தெரிய வந்­த­தாக சுகா­தா­ரத்­துறை அறி­வித்­தது.

இந்­நி­லை­யில், நயன்­தா­ரா­வின் குடும்ப நல மருத்­து­வ­ரின் ஆலோ­ச­னைப்­ப­டியே தங்­கள் மருத்­து­வ­ம­னை­யில் இரு குழந்­தை­கள் பிறக்க அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக அதன் நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது. ஆனால், நயன்­தாரா, விக்­னேஷ்­சி­வன் ஆகிய இரு­வ­ரை­யும் பரி­சோ­தனை செய்­யா­ம­லேயே அவர்­க­ளின் குடும்ப மருத்­து­வர் சொன்­ன­தைக் கேட்டு மருத்­து­வ­மனை செயல்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மேலும், வாட­கைத்­தாய் குறித்து உரிய விவ­ரங்­கள், ஆவ­ணங்­கள் இல்­லா­மல் பிர­ச­வம் பார்க்­கப்­பட்­ட­தாக புதிய சர்ச்சை வெடித்­துள்­ளது. இதை­ய­டுத்து, அந்த மருத்­து­வ­ம­னைக்கு சீல் வைக்க அரசு நோட்­டீஸ் அனுப்­பி­யுள்­ளது என்­றும் இத­னால் மருத்­து­வ­மனை நிர்­வா­கத்­துக்கு கடும் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது என்றும் கூறப்படுகிறது.