கடத்தப்பட்ட சிலைகள் மீட்பு

கடத்தப்பட்ட சிலைகள் மீட்பு

1 mins read
33f4ab0e-2c8b-486a-a7fd-e8cd31c85cb8
மீட்கப்பட்ட மூன்று சிலைகளும் தமிழகத்தில் எந்த கோவிலில் இருந்து கடத்தப்பட்டன என்று காவல்துறை விசாரித்து வருகிறது.படம்: தகவல் ஊடகம் -

ராணிப்பேட்டை: ஆற்­காடு பகு­தி­யில் உள்ள ஒரு வீட்­டில் பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த ஐம்­பொன் சிலை­களை ராணிப்­பேட்டை காவல்­து­றை­யி­னர் பறி­மு­தல் செய்­த­னர்.

கோவில்­களில் இருந்து கடத்தி வரப்­பட்ட சிலை­கள் அவ்­வீட்­டில் உள்­ள­தாக கிடைத்த ரக­சி­யத் தக­வ­லின் பேரில் காவல்­துறை அதி­ரடி சோதனை மேற்­கொண்­டது. அப்­போது முரு­கப்­பெ­ரு­மான், மாரி­யம்­மன் சிலை­கள் இருப்­ப­தைக் கண்­டு­பி­டித்­த­தா­க­வும் அச்­சி­லை­கள் ஐம்­பொன்­னால் செய்­யப்­பட்­டவை என்­பது தெரிய வந்­த­தா­க­வும் காவல்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். இது தொடர்­பாக மூன்று பேர் கைதா­கி­னர். சிலை­க­ளின் மதிப்பு குறித்து விவ­ரம் தெரியவில்லை.