அவதூறுப் பேச்சு: குஷ்புவிடம் மன்னிப்பு கோரிய கனிமொழி

2 mins read
3604cf1a-1ad8-486f-8a5c-1e172e701df1
-

சென்னை: பெண்­கள் குறித்து தரக்­கு­றை­வா­கப் பேசிய திமுக பேச்­சா­ள­ருக்கு நடி­கை­யும் பாஜக பிர­மு­க­ரு­மான குஷ்பு கண்­ட­னம் தெரி­வித்­துள்ள நிலை­யில், சமூக ஊட­கம் வழி திமுக பிர­மு­க­ரின் பேச்­சுக்­காக திமுக துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் கனி­மொழி மன்­னிப்பு கோரி­யுள்­ளார்.

அண்­மை­யில் சென்­னை­யில் நடை­பெற்ற பொதுக்­கூட்­டத்­தில் பேசிய திமுக பேச்­சா­ளர் சைதை சாதிக் பாஜ­க­வைச் சேர்ந்த நடி­கை­கள் குஷ்பு சுந்­தர், நமீதா, காயத்ரி ரகு­ராம், கௌ­தமி ஆகி­யோர் குறித்து சர்ச்­சைக்­கு­ரிய வகை­யில் அவதூறாகவும் தரக் குறைவாகவும் பேசி­ய­தா­கப் புகார் எழுந்­துள்­ளது.

அவர் தரக்­கு­றை­வா­கப் பேசி­யதை பொதுக்­கூட்ட மேடை­யில் இருந்த திமுக நிர்­வா­கி­கள் யாரும் கண்­டிக்­க­வில்லை என்­றும் ஆண்­கள் பெண்­களை தவ­றா­கப்­ பேசுவது, அவர்­கள் வளர்க்­கப்­பட்ட விதத்­தை­யும், அவர்­கள் வளர்ந்த மிக மோச­மான சூழ­லை­யும் காட்­டு­கிறது என்­றும் குஷ்பு தமது அண்மைய டுவிட்­டர் பதிவு ஒன்றில் சாடி உள்­ளார்.

"இது­போன்ற ஆண்­கள் ஒரு பெண்­ணின் கருப்­பையை அவ­ம­திக்­கி­றார்­கள். மேலும், தங்­களை 'மறைந்த முதல்­வர் கரு­ணா­நி­தி­யைப் பின்­பற்­று­ப­வர்­கள்' என்­றும் அழைத்­துக் கொள்­கி­றார்­கள்.

"முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தலைமை­யின் கீழ் இது­தான் புதிய திரா­விட மாதி­ரியா?" என்று கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார் குஷ்பு.

இதை­ய­டுத்து டுவிட்­ட­ரி­லேயே மன்­னிப்பு கோரி­யுள்­ளார் கனி­மொழி. ஒரு பெண்­ணாக திமுக பேச்­சா­ள­ரின் பேச்­சுக்­காக தாம் மன்­னிப்பு கேட்­ப­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இதை யார் செய்­தி­ருந்­தா­லும், சொன்ன இடம் அல்­லது அவர்­கள் சார்ந்த கட்சி எது­வாக இருந்­தா­லும், இது எக்­கா­ர­ணத்­தைக் கொண்­டும் சகித்­துக்­கொள்ள முடி­யா­தது. இதற்­காக என்­னால் வெளிப்­ப­டை­யாக மன்­னிப்­புக் கேட்க முடி­கிறது.

"ஏனெ­னில் எனது தலை­வர் மு.க.ஸ்டா­லி­னுக்­கும் எனது கட்­சி­யான திமு­க­வுக்­கும் இது ஒரு­போ­தும் ஏற்­பு­டை­ய­தல்ல," என்று கனி­மொழி தமது பதி­வில் தெரி­வித்­துள்­ளார்.

அவ­ரது இந்­தப் பதிலை, முதிர்ச்சியான செயல்பாடு என இணை­ய­வா­சி­கள் பல­ரும் வர­வேற்­றுள்­ள­னர். நடிகை குஷ்­பு­வும் தன் பங்­குக்­கு கனிமொழியைப் பாராட்டி உள்­ளார்.

"உங்­க­ளு­டைய (கனி­மொழி) நிலைப்­பாட்­டுக்­கும் ஆத­ர­வுக்­கும் நன்றி. நீங்­கள் எப்­போ­தும் பெண்­க­ளின் மதிப்­புக்­கும் சுய­ம­ரி­யா­தைக்­கா­க­வும் குரல் கொடுத்­த­வர்," என்று கூறி­யுள்­ளார் குஷ்பு.