கோவை கார் வெடிப்பு: 15 பேருக்கு வலைவீச்சு

கோவை கார் வெடிப்பு: 15 பேருக்கு வலைவீச்சு

2 mins read
7d95744b-0c11-409c-a0ce-f51ec7375f5b
வெடித்த காரை பார்வையிடும் அதிகாரிகள். படம்: ஊடகம் -

கைதானோர் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மீண்டும் சோதனை

கோவை: கோவை கார் வெடிப்­புச் சம்­ப­வம் தொடர்­பாக அடுத்­தடுத்து அதிர்ச்­சி­யூட்­டும் தக­வல்­கள் வெளி­வந்த வண்­ணம் உள்­ளன. இந்­நி­லை­யில், முக்­கிய குற்­ற­வாளி எனக் கரு­தப்­படும் முபி­னு­டன் தொடர்­பு­டைய 15 பேருக்கு புல­னாய்வு அதி­கா­ரி­கள் வலை­வீசி உள்­ள­னர்.

அவர்­கள் ஏதே­னும் சதிச் செயல் களை அரங்­கேற்ற திட்­ட­மிட்­டி­ருக்­க­லாம் என சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த கார் வெடிப்­புச் சம்­ப­வம் தொடர்­பாக இது­வரை ஆறு பேர் கைதாகி உள்­ள­னர். அவர்­களில் ஐந்து பேரை 15 நாள்­கள் நீதி­மன்றக் காவ­லில் எடுத்து விசா­ரணை நடத்த அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், ஐந்து பேரின் வீடு­க­ளி­லும் காவல்­துறை நேற்று மீண்­டும் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­டது.

இதற்­கி­டையே, தமி­ழக அரசு பரிந்­துரை செய்­ததை அடுத்து இந்த வழக்­கின் விசா­ரணை மத்­திய புல­னாய்வு முக­மை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான உத்­த­ரவை மத்­திய உள்­துறை அமைச்சு பிறப்­பித்­தது.

நேற்று முன்­தி­னம் நெல்லை மாவட்­டம் மேலப்­பா­ளை­யம் பகு­தி­யில் உள்ள மத போத­க­ரான முகம்­மது உசேன் (41 வயது) என்­ப­வ­ரி­டம் புல­னாய்வு அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­தி­னர். அவ­ரது வீட்­டில் சோதனை நடத்­தப்­பட்­டது. அப்­போது மடிக்­க­ணினி, கைப்­பே­சி­கள் உள்­ளிட்ட பொருள்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­தா­க­வும் அதே பகு­தி­யைச் சேர்ந்த மேலும் ஒரு­வ­ரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்­ட­தா­க­வும் தெரிகிறது.

முன்­ன­தாக இந்த வழக்கை விசா­ரிக்­கும் தேசிய புல­னாய்வு முகமை அதி­கா­ரி­க­ளு­டன் தமி­ழக காவல்­துறை தலை­வர் சைலேந்­தி­ர­பாபு ஆலோ­சனை மேற்­கொண்­டார். அப்­போது தமி­ழக காவல்­துறை சேக­ரித்­துள்ள அனைத்து தக­வல்­களும் ஒப்­ப­டைக்­கப்­படும் என அவர்­க­ளி­டம் உறு­தி­ய­ளித்­தார்.

இதற்­கி­டையே, கோவை கார் வெடிப்பு சம்­ப­வத்தை அடுத்து தமி­ழக பாஜக நிர்­வா­கி­கள் எச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்க வேண்­டும் என அக்­கட்சி தலைமை அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

இதற்­கி­டையே, கார் வெடிப்பு சம்­ப­வத்­தில் வெளி­நாட்­டில் இயங்­கும் பயங்­க­ர­வாத குழுக்­க­ளுக்கு தொடர்பு உள்­ளதா என்று புல­னாய்வு முகமை சந்­தே­கிக்­கிறது. குறிப்­பாக இலங்­கை­யில் நிகழ்ந்த ஈஸ்­டர் குண்டு வெடிப்­புச் சம்­ப­வத்­தில் தொடர்­பு­டைய வெளி­நாட்டு பயங்­க­ர­வா­தக் குழு, கோவை­யி­லும் தன் கைவ­ரி­சையைக் காட்ட முயன்­றதா என அதி­கா­ரி­கள் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

கோவை­யில் சாலை­களில் கேட்­பா­ரற்று நிறுத்­தப்­பட்­டுள்ள வாக­னங்­கள் பறி­மு­தல் செய்­யப்­ப­டு­கின்­றன.