தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி

1 mins read
eff6ba58-2bc6-450a-9b9d-3f61b3e235a8
-

விழுப்புரம்: சிங்­கப்­பூ­ரில் வேலை வாங்­கித் தரு­வ­தா­கக் குறிப்­பிட்டு தமக்கு வந்த மின்­னஞ்­சலை நம்பி ரூ.99,980 செலுத்­திய ஆட­வர் அப்­பணத்தை இழந்­துள்­ளார்.

விழுப்­பு­ரம் மாவட்­டத்­தைச் சேர்ந்த 35 வய­தான சாதிக் பாஷா என்­ப­வர் வெளி­நாடு சென்று வேலை பார்க்­கும் ஆவ­லில் தனது பெய­ரை­யும் இதர விவ­ரங்­க­ளை­யும் தனி­யார் இணை­யத்­த­ளத்­தில் பதிவு செய்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில் கடந்த ஏப்­ரல் மாதம் அவ­ருக்கு முன்­பின் அறி­மு­க­மற்ற ஒரு­வ­ரி­டம் இருந்து மின்­னஞ்­சல் வந்­தது.

அதில், சிங்­கப்­பூ­ரில் வேலை வாய்ப்பு தயா­ராக இருப்­ப­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

பின்­னர், இரு கைப்­பேசி எண்­களில் இருந்து அடுத்­த­டுத்து வந்த அழைப்­பு­க­ளின்­போது, அவ­ரி­டம் சிறிய அள­வில் நேர்­கா­ணல் நடை­பெற்­ற­தால், நடப்­பது அனைத்­தும் உண்மை என நம்­பி­யுள்­ளார் சாதிக் பாஷா.

இறு­தி­யில் கைப்­பே­சி­யில் தொடர்புகொண்டு பேசி­ய­வர்­கள், அவர் பெய­ரில் விசா, காப்­பீடு, விமா­னப் பய­ணச்­சீட்டு ஆகி­ய­வற்­றைப் பெறு­வ­தற்கு ரூ.99,980 செலுத்த வேண்­டும் என கூறி­யுள்­ள­னர்.

அதை நம்பி சாதிக் பாஷா பணத்தை செலுத்­திய பிறகு இந்­நாள் வரை யாரும் அவரை தொடர்பு கொள்­ள­வில்லை.