93 குற்றவாளிகள் பிடிபட்டனர்

93 குற்றவாளிகள் பிடிபட்டனர்

1 mins read
099c4406-0d54-4262-81d9-9d7c20de84eb
-

சென்னை: தலை­ந­கர் சென்னை யில் குற்­றச்செயல்­க­ளைத் தடுக்­க­வும் குற்ற வழக்­கு­களில் தொடா்பு­டைய தலை­ம­றைவு குற்­ற­வா­ளி­களைப் பிடிக்­க­வும் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­யின் பல­னாக ஒரேநாளில் 93 தலை மறைவு குற்­ற­வா­ளி­கள் கைது செய்­யப்­பட்டனா்.

இந்த வழக்­கு­களில் ஏற்­கெ­னவே 604 போ் கைது செய்­யப்­பட்டு சிறைக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­னர். சென்­னை­யில் குற்­றங்­கள் நடை­பெ­றா­மல் தடுப்­ப­தற்கு இது போன்ற நட­வ­டிக்கை இனி அடிக்­கடி எடுக்­கப்­படும் என சென்னை காவல் ஆணை­யாளா் சங்கா் ஜிவால் தெரி­வித்­துள்ளாா்.