10,000 தேநீர் குவளைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பழங்குடிப் பெண்கள்

10,000 தேநீர் குவளைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பழங்குடிப் பெண்கள்

1 mins read
d73c9dd7-31f5-414c-8052-1aec8b6ec842
முதல்கட்டமாக களிமண்ணால் 10,000 தேநீர் குவளைகளைத் தயாரித்து கத்தார் நாட்டுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர் இப்பழங்குடியினப் பெண்கள். படித்தவர்களைக் காட்டிலும் குறைந்த கல்வியறிவு கொண்ட தங்களின் தயாரிப்புகளுக்கும் வெளிநாட்டில் அங்கீகாரம் கிடைத்திருப்பது பெருமை தருவதாகவும் இவர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். படம்: ஊடகம் -

ஆனைக்கட்டி: கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ளது ஆனைக்கட்டி கிராமம். இங்குள்ள 'தயா சேவா சதன்' என்ற தொண்டு நிறுவனம் கொண்டனூர், பனப்பள்ளி மலைக் கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்களின் வாழ்வாதாரமாகச் செயல்பட்டு வருகிறது. இவர்கள் இங்கு களிமண்ணால் தயாரிக்கப்பட்ட குவளை, தட்டு, கையால் தயாரான விரிப்புகள், மூலிகைத் தேன் வகைகள், பழக் கலவைகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

சௌந்தரராஜன் என்பவரால் கடந்த 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்தொண்டு நிறுவனத்தில் பழங்குடியின ஏழைப் பெண்கள், ஆதரவற்றோர், கணவனை இழந்த பெண்கள் என 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.