தேர்வில் முதலிடம்: 'ஒருநாள் தலைமை ஆசிரியை' ஆன மாணவி

தேர்வில் முதலிடம்: 'ஒருநாள் தலைமை ஆசிரியை' ஆன மாணவி

2 mins read
03283446-a589-4dfd-88fd-060019fee9a5
-

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 4,000 மாணவிகள் படித்து வரு கின்றனர். இவர்களில், சிறப்பாகப் படித்து முதலிடத்தில் மதிப்பெண்கள் பெற்ற 'பிளஸ் 2' மாணவி லோகி தாவை 'முதல்வன்' திரைப்படப் பாணியில் 'ஒரு நாள் தலைமை ஆசிரியை' ஆக பள்ளி நிர்வாகம் நியமித்து அழகு பார்த்தது.

இதைக்கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்த லோகிதாவை அழைத்துச் சென்று, தலைமை ஆசிரியையின் இருக்கையில் அமரவைத்தனர்.

மாணவி லோகிதாவும் ஒரு தலைமை ஆசிரியரின் அணுகு முறையோடு நாற்காலியில் அமர்ந்து அன்றாடப் பணிகளைக் கவனித்தார்.

பின்னர், தலைமை ஆசிரியரைப் போல் ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று என்ன பாடம் நடத்து கிறீர்கள் என ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார்.

அதேபோல், மாணவிகளிடமும் அவர்களது நிறை, குறைகளைக் கேட்டறிந்தார்.

அவற்றை உடனடியாக சரிப் படுத்தவும் நடவடிக்கை எடுத்தார்.

தன் பணி அனுபவம் குறித்து லோகிதா கூறுகையில், "காலாண் டுத் தேர்வில் 600க்கு 581 மதிப் பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றேன். படிக்கும் பள்ளியிலேயே ஒருநாள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி யது மறக்கமுடியாத அனுபவம். என்னைப் பார்க்கும் மற்ற மாணவி களுக்கும் இதுபோன்று தலைமை ஆசிரியையாகும் எண்ணம் வரும். அதனால், படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்," என்றார்.

தலைமையாசிரியை கூறியபோது, "படித்து உயர்ந்த பதவிக்குச் செல்ல வேண்டும், நிர்வாகப் பணிகளை யும் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விதத்தில் இதனை முன்மாதிரியாகச் செயல்படுத்தி னோம்," என்று தெரிவித்தார்.

தலைமை ஆசிரியை நாற்காலியில் மாணவி லோகிதா.

படம்: தமிழக ஊடகம்