மூன்று கோவில்களைத் தாக்கத் திட்டம் தீட்டியதாக கைதி அதிர்ச்சித் தகவல்

மூன்று கோவில்களைத் தாக்கத் திட்டம் தீட்டியதாக கைதி அதிர்ச்சித் தகவல்

2 mins read
ea6c95f1-d32d-4393-af3a-d1db6073ed10
-

கோவை: கோவை­யில் உள்ள உக்­க­டம் சங்­க­மேஸ்­வ­ரர், டவுன் ஹால் கோனி­யம்­மன், புளி­யங்­கு­ளம் விநா­ய­கர் கோவில் உள்­ளிட்ட மூன்று கோவில்­க­ளைத் தகர்ப்­ப­தற்­குத் தாங்­கள் திட்­டம் தீட்­டி­யி­ருந்­த­தாக விசா­ர­ணை­யின்­போது அதிர்ச்சி யூட்­டும் தக­வலை அப்­சர் கான் என்ற கைதி தெரி­வித்­துள்­ளார்.

இவர், அண்­மை­யில் கார் வெடிப்­பில் உயி­ரி­ழந்த ஜமேஷா முபி­னின் உற­வி­னர் என்று கூறப்­ப­டு­கிறது.

கோயம்­புத்­தூர் மாவட்­டம், கோட்­டை­மேடு ஈஸ்­வ­ரன் கோயில் அருகே கடந்த 23ஆம் தேதி நடந்த ஒரு கார் விபத்­தில் அதில் இருந்த சமை­யல் எரி­வாயு உருளை வெடித் துச் சித­றி­யது.

இவ்­வி­பத்­தில் காரை ஓட்­டிச் சென்ற ஜமேஷா முபின் இறந்­தார்.

அவ­ரது வீட்­டில் நடத்­திய சோத னையில் 75 கிலோ வெடி­பொ­ருள்­கள் கைப்­பற்­றப்­பட்­டன. முபி­னின் நண்­பர்­கள் ஐவர் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அதன்­பி­றகு, ஆறா­வ­தாக முபி­னின் உற­வி­னர் அப்­சர் கான் கைது செய்­யப்­பட்­டார்.

ஐவரை­யும் நவம்­பர் 8ஆம் தேதி வரை கோவை மத்­திய சிறை யில் அடைக்க கோவை நீதி­மன்ற நீதி­பதி சந்­தோஷ் உத்­த­ர­விட்­டார்.

இத­னி­டையே, தமி­ழக காவல் துறை நடத்­திய விசா­ர­ணை­யில் பல்­வேறு அதிர்ச்­சித் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

கார் வெடிப்­புத் தாக்­கு­தல், பயங் கர­வாத சிந்­தனை கொண்­ட­வர்­கள் கையா­ளும் 'தனி ஒரு­வ­ரின் தாக்­கு­தல்' முறையை ஒத்­தி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­துள்­ளது.

மூன்று 'டிரம்'களில் வெடி மருந்­து­டன் ஆணி, பால்­ரஸ் கோலிக் குண்­டு­கள் உள்­ளிட்­ட­வற்றை நிரப்பி காரில் வைத்­துக்­கொண்டு அதனை கோயில் முன்­பாக நிறுத்தி சமை­யல் எரி­வாயு உரு­ளை­யில் இருந்து வாயு­வைத் திறந்­து­விட்டு ஜமேஷா முபின் தற்­கொ­லைப் படை தாக்­கு ­தல் நடத்­தி­யி­ருக்க வாய்ப்­புள்­ள­தா­க­ காவ­லர்­கள் சந்­தே­கித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே, தேசிய புல­னாய்வு முகமை (என்­ஐஏ) பதிவு செய்த முதல் தக­வல் அறிக்­கை­யில், கோவை கார் வெடிப்­புச் சம்­ப­வம் தொடா்பாக ஜமேஷா முபின் வீடு உள்­பட பல்­வேறு இடங்­களில் நடத்­தப்­பட்ட சோத­னை­யில், பொட்­டா­சி­யம் நைட்­ரேட், பிளாக் பவுடா், தீப்­பெட்டி, சிவப்பு பாஸ்­ப­ரஸ், கண்­ணா­டி­கள், சிறு ஆணி­கள், கையு­றை­கள், ஜிஹாத் வரி­கள் கொண்ட நோட்­டு­கள் உட்­பட 109 வகை­யான பொருள்­கள் கைப்­பற்­றப்­பட்­ட­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன், சமை­யல் எரி­வாயு உருளை வெடித்­த­தாக எந்த இடத்­தி­லும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. அதே­வே­ளை­யில், வெடி­பொ­ருள் வெடித்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்­குத் தொடர்­பாக தேசிய புல­னாய்வு முகமையின் (என்­ஐஏ) தலைமை விசா­ரணை அதி­கா­ரி­யாக என்ஐஏ ஆய்வாளர் எஸ். விக்­னேஷ் நியமிக்கப்பட்டுள்ளாா். இவ்வழக்கு சென்னை பூந்­த­மல்லி யில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதி மன்றத்துக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது.