காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூரில் இருந்து காரைக்காலுக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை ஐயப்பன் என்பவர் ஓட்டிச்சென்றுள்ளார்.
செல்லூர் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநர் ஐயப்பனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த மரத்தின் மீது மோதி, ஒரு கடை மீதும் மோதி நின்றது. இதில் ஐயப்பன், நடத்துநர் மகேஸ்வரன் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் காயமடைந்த வர்களை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காகச் சேர்த்தனர்.

