இரு கோடி முட்டைகள் தேக்கம்; பண்ணையாளர்கள் கவலை

நாமக்­கல்: கேர­ளா­வில் பரவி வரும் பற­வைக் காய்ச்­சல் எதி­ரொ­லி­யால், நாமக்­கல் பண்­ணை­களில் இரண்டு கோடி முட்­டை­கள் தேக்­கம் அடைந்­துள்­ளன.

அத்­து­டன், வெளி­நா­டு­க­ளுக்­கான ஏற்­று­ம­தி­யும் முடங்­கி­ உள்ளதால் கோழிப் பண்ணை உரி­மை­யா­ளர்­கள் கவலை அடைந்­துள்­ள­னர்.

கேரள மாநிலத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் காரணமாக தமி­ழ­கம்-கேரள எல்­லை­யில் கால்நடைத்துறை அதிகாரிகளும் காவலர்களும் தீவிர கண்­கா­ணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு மாநில எல்­லை­யில் உள்ள சோத­னைச் சாவ­டி­களில் கிருமி நாசினி தெளிக்­கப்­பட்டு, தொற்று நீக்­கிய பின்­னரே வாக­னங்­களை கால்­ந­டைத் துறை அதி­கா­ரி­கள் அனு­ம­தித்து வரு­கின்­ற­னர்.

கேர­ளா­வில் பறவைக் காய்ச்ச லைக் கட்டுக்குள் கொண்டுவரும் சோத­னை­கள் தொட­ரும் சூழ­லில், தமி­ழ­கத்­தி­லும் பற­வைக் காய்ச்­சல் பர­வ­லைத் தடுக்­கும் பணி­கள் முடுக்கி விடப்­பட்­டுள்­ளன.

நாமக்­கல் மாவட்­டத்­தில் ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட கோழிப் பண்­ணை­களில் சோதனைகள் நடத்தி, கிருமி நாசி­னி­க­ளை கால்நடைத் துறை அதிகாரிகள் தெளித்­த­னர்.

பண்­ணை­க­ளுக்கு வரும் வாக­னங்­களும் வெளியே செல்­லும் வாக­னங்­களும் மருந்து தெளிக்­கப்­பட்ட பின்­னரே அனு­ம­திக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எனி­னும், பற­வைக் காய்ச்­சல் பீதி கார­ண­மாக முட்டை, கோழி­களின் விற்­பனை சரி­வ­டைந்­துள்­ளது. இத­னால் 2 கோடி முட்­டை­கள் பண்­ணை­களில் தேக்­க­ம் அடைந்­துள்­ளன.

வெளி­யூர், வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­படும் முட்­டை­கள் நிறுத்தி வைக்கப்­பட்­டுள்­ள­தால் பல கோடி ரூபாய் வர்த்­த­கம் முடங்­கி­ உள்­ளது.

தமி­ழ­கத்­தில் பற­வைக் காய்ச்­சல் பாதிப்பு இல்லை என்று அறி­வித்­தால் மட்­டுமே வர்த்­த­கம் மீண்­டும் சீரா­கும் என்று கோழிப் பண்ணை உரி­மை­யா­ளர்­கள் தெரி விக்கின்றனர்.

இத­னி­டையே, கோவை, நீல­கிரி, தேனி மாவட்­டங்­க­ளி­லும் எல்­லைப் பகு­தி­களில் கால்­நடை மருத்­து­வர்­கள், காவ­லர்­கள் தீவிர சோத­னை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!